Audi E-Tron: தெலுகு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய கார் Audi E Tron... இந்த பீஸ்ட்டோட சிறப்புகள் தெரியுமா?
மகேஷ் பாபு, தன் கார் கலெக்சனுக்கு அழகு சேர்க்க, புதியதாக ஆடி ஈ-ட்ரான் மாடலை வாங்கியிருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு (Mahesh Babu) சிறப்புகள் வாய்ந்த கார்களை வாங்குவது அவருக்கு மிகவும் பிடித்தமானது. கார் வாங்குவதில் அவருக்கு அவ்வளவு பிரியம். அப்படி, மகேஷ் பாபுவிடம் பல சிறப்பம்சங்களுடன் உள்ள எக்சாக்டிக் கார்களின் கலெக்சன் இருக்கிறது. அந்தவகையில், தற்போது, மிக பிரபலமான காராக ஆடி நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதுவும் எலக்ட்ரானிக் கார்.
Audi E-tron என்ற எலக்ட்ரின் எஸ்.யூ.வி. ரக கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எலக்ட்ரானிக் கார் ஒன்றை வீட்டிற்கு வரவேற்பதாகவும். சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத, மற்றும் நிலைத்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஆடி-ஈ-ட்ரான் எப்படி இருக்கும் என்று பயன்படுத்தவும், ஆடி காரின் அனுபத்தையும் பெற ஆர்வமுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
Audi E-tron சிறப்புகள் என்னென்ன?
இந்த எலக்ட்ரானிக் கார், 20 இன்ச் கிராஃபைட் கிரே டைம்ண்ட் அலாய் வீல்கள், எல்.இ.டி. ஸ்ட்ரிப்ஸ் என காருக்கே பெரும் பிரமாண்டமான லுக்கை வழங்கும் பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் 5,014 மிமீ நீளமும், 1,686 ,மிமீ உயரமும் 1,976 மீமீ அகலத்துடன் நல்ல வசதியாக காராக இருக்கிறது, Audi e-tron பேடி மாடல் 660லி பூட் ஸ்பேஸ்( boot space) உடனும், அதனுடன் 1,725லி பூட் ஸ்பேஸை விரிவாக்கமும் செய்து கொள்ளலாம்.
காரின் உட்புறம் உயர்தர லெதர் கொண்டு மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டன்னிங் டேஷ்போர்டு, டச் ஸ்கிரீன் மானிட்டர், உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.
Audi e-tron காருக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ பேட்டரி வாரண்டி, ஐந்து ஆண்டுகளுக்கான ரோட் சைட் அசிஸ்டண்ட்ஸ், இரண்டு காம்ப்ளிமெண்ட்ரி சார்ஜர்ஸ் ஆகியவைகளும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பத்தைப் பொறுத்தவகையில் 3டி உடனான 16 ஸ்பீக்கர் Olufsen ஆடியோ சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, சன் ரூஃப், எட்டு ஏர் பேக்குகள், பார்க்கிங் சென்சார் ஆகியவைகள் கிடைக்கின்றன.
71 kWh திறன் கொண்ட பேட்டரி, பவர், 308 hp மற்றும் 540 Nm torque கொண்டுள்ளது. இது6.8 நொடிகளில் 0 - 100 kmph வேகத்தில் செல்லும்.இந்த காரின் விலை 1.19 கோடியாகும்.
ரித்தேஷ் டேஷ்முக் (Riteish Deshmukh), பூஜா பத்ரா( Pooja Batra) மற்றும் முகேஷ் அம்பானி( Mukesh Ambani) ஆகிய பிரபலங்கள் இந்தியாவில் எலக்ட்ரானிக் கார்கள் வைத்துள்ளவர்களில் சிலர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

