மேலும் அறிய

Maha Movie Director : "மஹா படம் குறித்து எனக்கே எந்த தகவலும் கிடைக்கல...!" - வேதனையில் புலம்பும் ஹன்சிகா பட இயக்குனர்..!

மஹா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெர்ஷனை மீண்டும் வெளியிடுவேன் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜமீல் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது 50வது படமான மஹா சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குனரானஜ உபைத் ரஹ்மான் ஜமீல் இந்த படத்தை இயக்கியுள்ளார். மஹா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்து வரும் சூழலில், படத்தின் இயக்குனரான ஜமீல் தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, “ மஹா இது தோல்வியல்ல. முழுமை பெறாத வெற்றி. சில கதைகளை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். அதுபோன்ற கதைதான் மஹா. இந்த கதையின் திரைக்கதையை முடித்தவுடன் எனக்குத் தெரிந்தது. சுமார் ஏழரை வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கி, 5 வருடத்திற்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தானது. எனது முதல் படம் இது.


Maha Movie Director :

தயாரிப்பு நிறுவனத்துடான எனது கருத்து வேறுபாடுகள் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. என்னுடைய முழு உழைப்பை நம்பி, எனது திரைக்கதைக்காக இறுதிவரை சண்டையிட்டேன். ஆனால், என்னால் தனித்து சண்டையிட முடியாதென்று ஒன்றரை வருடங்களுக்கு பிறகுதான் தெரிந்தது. அப்படி வெளியானதுதான் இந்த படம்.

சிலம்பரசன் மற்றும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு முறை படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வரும்போது பெரிய வரவேற்பை கொடுத்தீர்கள். எனது ஐந்து வருட உழைப்பை எனக்கேத் தெரியாமல் வெளியிட்டுவிட்டனர். ரசிகர்களுக்காக இந்த படத்தை சீக்கிரம் வெளியிட வேண்டும் என்று நினைத்த எனக்கே, இந்த படம் குறித்த எந்த தகவலும் இல்லாதது மன வருத்தத்தை தருகிறது.


Maha Movie Director :

ஒவ்வொரு படத்திற்கும் இயக்குனர்தான் கேப்டன் ஆப் தி ஷேப். ஆனால், அந்த கேப்டனும் ஆடியன்ஸ் போல படம் எப்படி வருகிறது? என்பதை காண காத்திருப்பது வருத்தமானது. மஹாவுடனான எனது பயணம் வாழ்வில் மறக்க முடியாதது. எனது அடுத்த படத்தை பற்றி விரைவில் அறிவிப்பேன். அதற்கு முன்பு. மஹா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெர்ஷனை வெளியிடுவேன். அதாவது டைரக்டர் கட்ஸ்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மஹா படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்தார். படப்பிடிப்பின்போதே அவருக்கும், இயக்குனர் ஜமீலுக்கும் கருத்து முரண்பாடு இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், இயக்குனர் ஜமீலின் அறிக்கை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
இந்த வருடம் சூர்யாதான் வசூலில் கிங்! விஜய்யின் 'ஜன நாயகன்' சாதனையையும் மிஞ்சிய 'கருப்பு'
இந்த வருடம் சூர்யாதான் வசூலில் கிங்! விஜய்யின் 'ஜன நாயகன்' சாதனையையும் மிஞ்சிய 'கருப்பு'
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Embed widget