மேலும் அறிய

Maaveeran Third Single: சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ். ’வா வீரா!’ - மாவீரன் மூன்றாவது பாடல் நாளை ரிலீஸ்!

Maaveeran Third Single: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாவீரன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை (07/07/2023) வெளியாகிறது. 

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாவீரன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை (07/07/2023) வெளியாகிறது. 

இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

மூன்றாவது பாடல்: 

’மாவீரன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்தை அதிகப்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் மேலா பார்க்கும்போது, அவருக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிடுவது போல அமைந்திருந்த்து. ‘எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’ என்ற வசனம் இருந்தது. சிவகார்த்திகேயன் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் கார்டூன் வரையும் பணியை செய்கிறார். அதனால், எழும் சிக்கல்கள் சார்ந்து கதை நகர்கிறது. அதிதி சிவகார்த்திகேயனுடன் பணிபுரிகிறார். சரிதா சிவகார்த்திகேயன் அம்மாவாக வருகிறார். ட்ரெய்லரின் சில ஷாட்களில் பிறரிடம் அடி வாங்கும் சிவகார்த்திகேயன், பின்னர், திருப்பி அடிக்கிறார். இந்த ட்ரெயிலரில் சிவகார்த்திகேயனுக்கு திடீரென மேலே பார்த்ததும் என்ன நடக்கிறது? என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படம் வெளிவந்ததா என்பது அவரது ரசிகர்களுக்கே பெரிய கேள்வி. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்  வரும் ஜூலை 14- ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளது. 

மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் மாவீரன். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் பாடல் சீனா. சீனா.. இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.. மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரும் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதிர்த்து நின்றான்' எனும் கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் படங்களுடன் கூடிய காமிக்ஸ் வரைபடங்களும் இந்த டீசரில் காணப்பட்டன. இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது.  இந்நிலையில் மாவீரன் படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாக உள்ளது.மாவீரன் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் ப்ரீ-ரிலீஸ் விழா:

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா வரும் ஜூலை 2-ம் தேதி சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய் கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், யோகிபாபு, சரிதா ஆகியோரின் ஆஃப்ஸ்க்ரீன் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.  இதற்கான முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

மாறிய வெளியீட்டு தேதி:

மாவீரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, தற்போது முன்கூட்டியே ஜுலை 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் அடுத்த புராஜெக்ட்:

மாவீரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.கே. 21 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.கேக்கு ஜோடியாக முதல் முறையாக இணைகிறார் நடிகை சாய் பல்லவி.  


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
Jailer 2: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு... கொத்துக்கறி போட காத்திருக்கும் நெட்டிசன்கள்.. தப்புமா ரஜினியின் “ஜெயிலர் 2”?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget