மேலும் அறிய

Maaran Release | தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு! - இது மாறன் அப்டேட்!

அருண் - மாதேஷ்வரன் நடிப்பில் ஒரு படம். படு பிஸியாக தனது வருடாந்திர கால்ஷூட்டை நிறைத்து வைத்திருக்கிறார் தனுஷ். 

பன்முக திறமையால் அசத்தி வரும் திரைத்துறை கலைஞர்தான் தனுஷ். கோலிவுட் , பாலிவுட், டோலிவுட் , ஹாலிவுட் என அடுத்தடுத்து தனது முத்திரையை பதித்து வருகிறார். நடிப்பு அசுரன் என கொண்டாடப்படும் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் மாறன். தனுஷின் 43 வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்தியஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. படம் சமீப காலமாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் தற்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக மாறன் திரைப்படத்தை படக்குழுவினர் ஓடிடிக்கு விற்றதாகவும் , கொரோனா ஊரடங்கு முடிந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளாதால், மாறன் திட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகும் என சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


மாறன் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. மாறன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில்  தனுஷ் மாளவிகாவுடன் சேர்த்து  ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்னும் கலாட்டா கல்யாணம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , ஆயிரத்தில் ஒருவன் 2 ,  நேரடி தெலுங்கு படமான வாத்தி (தமிழிலும் பை-லிங்குவலாக உருவாக உள்ளது), அருண் - மாதேஷ்வரன் நடிப்பில் ஒரு படம் என படு பிஸியாக தனது வருடாந்திர கால்ஷூட்டை நிறைத்து வைத்திருக்கிறார் தனுஷ். 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget