மேலும் அறிய
Advertisement
’இயக்குநர் ஷங்கர் படங்களை இயக்க தடைவிதியுங்கள்’ - லைகா மேல்முறையீடு..
இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடைவிதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் ‘இந்தியன் - 2’ திரைப்படத்தை முடித்துக்கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்கு தடைவிதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றுகூறி, இதுதொடர்பாக ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 15-ஆம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் பிற படங்களை எடுக்க தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்க லைகா எதிர்ப்பு தெரிவித்து வழக்கை தொடர்ந்து, அதற்கு தனி நீதிபதி தடைவிதிக்க மறுத்த நிலையில், மேல்முறையீடு செய்துள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion