Love Today Movie : லவ் டுடே திரைப்படத்தின் கதை திருட்டு கதையா..சர்சையில் சிக்கிய பிரதீப் ரங்கநாதன்!
படத்தின் மையக்கரு, முழுக்க முழுக்க நான் எழுதிய வரிகளில் இருந்துதான் கையாளப்பட்டிருக்கிறது என்பதை என் பாடல் வரிகளை படிப்பவர்களுக்கு தெரியும் - அறிவுமதி
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி 90s கிட்ஸ்களின் காதல், நினைவுகளை அழகாக காட்டியிருந்த கோமாளி படம் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. அத்துடன் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்படி நச்சுனு ஒரு காட்சியையும் புகுத்தியிருப்பார் பிரதீப். இவர் கோமாளி படத்தின் க்ளைமாஸில் ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இவர் தற்போது இயக்கி இருக்கும் திரைப்படம் லவ் டுடே. நடிகர் சத்யராஜ், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இன்று வெளியான நான்கு படத்திலும் இந்த படத்திற்கு மக்கள் தங்களது ஆதரவை ஏராளமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது, அதைப்பற்றி லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்க நாதனே பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் படத்தின் கருவை சொல்லி, அதை நடைமுறை காமெடிகளை கோர்த்து சொல்லி இருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.
View this post on Instagram
சர்ச்சை பற்றி அறிவுமதி அளித்த பதில் :
ஏற்கனவே தமிழில் நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் அறிவுமதி இதே மையக் கருத்தை பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு பாடலில் எழுதி இருக்கிறார்.
"அந்தப் பாடலை நான் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி விழாக்களுக்குப் போகும்போது பல மேடைகளில் பாடியிருக்கிறேன். பையா படம் முடிந்தவுடன் அந்தப் பாடலைக் கேட்ட இயக்குநர் லிங்குசாமி, இதைத் தன் அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வதாக சொல்லி இருந்தார்.
குறிப்பாக செல்போன்களை மாற்றிக் கொள்வதை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்று சிலாகித்துப் பேசியிருந்தார். இந்தப் படத்தின் மையக்கரு, முழுக்க முழுக்க நான் எழுதிய வரிகளில் இருந்துதான் கையாளப்பட்டிருக்கிறது என்பதை என் பாடல் வரிகளை படிப்பவர்களுக்கு தெரியும். அவர் நன்றாக வரட்டும். ஆனால் ஒரு நாகரீகம் கருதி என்னிடம் இதற்கு அனுமதி கேட்டிருக்கலாம் என்பதுதான் என் வருத்தம்" என்று அறிவுமதி பேசி இருந்தார்.
நன்றி பிபிசி