மேலும் அறிய

Leo Trailer: தயார் நிலையில் நிற்கும் விஜய்... லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் இதுதான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் மிரள வைக்கும் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது மக்களே!

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், சான்டி மாஸ்டர், மிஸ்கின், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது லியோ திரைப்படம்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் 7 ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்  வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக படத்தில் நடிகை த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. தற்போது இந்த ட்ரெய்லர் இன்று மாலை 6: 30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணி

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் சமகாலத்தில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக உருவாகி இருக்கும் லோகெஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படப்பிடிப்பு

கடந்த ஆண்டு லியோ படத்தின் அறிவிப்பு வெளியாகி இந்த ஆண்டு ஜனவரி மாதம் லியோ திரைப்படத்திற்கான படபிடிப்பு வேலைகள் தொடங்கின. கிட்டதட்ட ஆறுமாதம் காலத்தில் மொத்தம் 125 நாட்கள் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

லியோ இதுவரை..

இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நான் ரெடிதான் பாடலை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ள அந்தோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸின் கதாபாத்திரங்கள் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

ஆடியோ லாஞ்ச்

ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருந்த லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர். தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும்  நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில் படம் குறித்த அடுத்தடுத்த ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget