மேலும் அறிய

Parvathy : அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிரா ஓட்டு போடுங்க.. பார்வதி வேண்டுகோள்..

மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மலையாள நடிகை பார்வதி மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்

மக்களவை தேர்தல் 2024

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும்   7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், நாட்டில் உள்ள 88 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்றும், கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் காலை முதலே தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்களித்துவரும் மலையாள திரைத்துறையினர்

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான அந்தந்த தொகுதிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். முன்னதாக நடிகர் ஃபகத் ஃபாசில் ஆலப்புழாவில் தன் தந்தை பாஸிலுடன் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் டொவினோ தாமஸ் , சுரேஷ் கோபி உள்ளிட்டவர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மலையாள முன்னணி நடிகையான  பார்வதி திருவோத்து வாக்களிப்பது தொடர்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்  “மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

தங்கலான்

 பூ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியவர் நடிகை பார்வதி திருவோத்து. தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , மரியான் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் . பார்வதி திருவோத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
RR vs PBKS Match Highlights: ராஜஸ்தானை புரட்டிப் போட்ட பஞ்சாப் வெற்றி; கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய சாம் கரன்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget