Leonardo DiCaprio: மீம்ஸுக்கு முற்றுப்புள்ளி; மீண்டும் துளிர்த்த காதல்; 27 வயது பெண்ணுடன் டேட்டிங்கில் டிகாப்ரியோ!
தன்னை விட 20 வயது குறைந்தவரும், பிரபல பாலிவுட் பாப் பாடகர் ஜெய்ன் மாலிக்கின் முன்னாள் காதலியுமான ஜிஜி ஹாடிட் உடன் லியானார்டோ டிகாப்ரியோ காதலில் விழுந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
25 வயதைக் கடந்த பெண்களை ப்ரேக் அப் செய்து விடுகிறார் என ஹாலிவுட் மீடியாக்கள் வரிந்து கட்டி புகார் தெரிவித்த லியானார்டோ டிகாப்ரியோ, தன்னை விட 20 வயது குறைந்த பிரபல ஹாலிவுட் மாடல் அழகியுடன் தற்போது காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
டைட்டானிக் எனும் ஒற்றைப் படம் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைந்தவர் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ.
ஹாலிவுட்டில் சிறு வயது முதல் நடித்து வரும் லியனார்டோ டிகாப்ரியோவின் நடிப்புத் திறமைக்காகவும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களுக்கெனவும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
அதேபோல் இன்னும் சிங்கிளாக திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றும் டிகாப்ரியோவின் தனிப்பட்ட வாழ்வின் மீது இவரது ரசிகர்களுக்கு அலாதி ஆர்வம் உண்டு. தற்போது 47 வயதாகும் டிகாப்ரியோ தன் 18ஆம் வயதில் தொடங்கி பல பெண்களையும் தொடர்ந்து டேட் செய்து வருகிறாரே தவிர திருமண வாழ்வில் கால் எடுத்து வைத்ததில்லை.
முன்னதாக டிகாப்ரியோ அமெரிக்க மாடலும் நடிகையுமான கமிலா மோரோன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் இந்த மாத தொடக்கத்தில் தங்கள் பிரிவை உறுதி செய்தனர்.
Leonardo DiCaprio’s girlfriends getting ready to go out for their 25th birthdays pic.twitter.com/TSIO5lWyDZ
— Tank.Sinatra (@GeorgeResch) August 31, 2022
இந்நிலையில், நெட்டிசன்கள் டிகாப்ரியோ மீது தற்போது வித்தியாசமான புகார் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அதாவது 25 வயதைத் தாண்டும் எந்த ஒரு நடிகையும் டிகாப்ரியோ இதுவரை டேட் செய்ததில்லை என்றும், தான் டேட் செய்யும் பெண்கள் 25 வயதை எட்டப்போவதை அறிந்து முன்கூட்டியே அவர்களுடன் சண்டைபோட்டு டிகாப்ரியோ கட் செய்து விடுகிறார் என்றும் நெட்டிசன்கள் அனல் பறக்க ட்விட்டரில் மீம்ஸ் பகிர்ந்து களமாடி வந்தனர்.
இந்நிலையில் டிகாப்ரியோ தற்போது பிரபல ஹாலிவுட் மாடல் ஜிஜி ஹாடிட்டை டேட் செய்து வருவதாக ஹாலிவுட் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
How Leonardo DiCaprio sees you at age 24 vs 25 pic.twitter.com/qdFXKClYer
— Caylen Duke (@CaylenDuke) September 1, 2022
கமிலாவுடனான ப்ரேக் அப்புக்கு பிறகு தன் நண்பர்களுடன் பொழுதைக் கழித்து வந்த டிகாப்ரியோ ஜிஜி ஹாடிட்டை டேட் செய்யத் தொடங்கியுள்ளார் என்றும், இது சாதாரண டேட் தான், இருவரும் முழுமையாக இன்னும் காதல் உறவில் இறங்கவில்லை என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் இருவரும் டின்னர் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
OMFG LEONARDO DICAPRIO AND GIGI HADID!!! pic.twitter.com/RuTVK8z7is
— ʟᴏɪᴅᴀ (@LDCOSTIGAN) September 14, 2022
25 வயதைக் கடந்த பெண்களை ப்ரேக் அப் செய்து விடுகிறார் என ஹாலிவுட் மீடியாக்கள் புகார் மேல் புகார் தெரிவித்து வந்த நிலையில், டிகாப்ரியோ தற்போது 27 வயது பெண்ணுடன் காதலில் விழுந்து தன் மீதான புகார்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் பாப் பாடகர் ஜெய்ன் மாலிக்கின் முன்னாள் காதலி ஜிஜி. இவருக்கும் ஜெய்ன் மாலிக்குக்கும் 4 வயது குழந்தை உள்ளது. ஆனால் முன்னதாக ஜெய்ன் மாலிக்கின் மேல் தன் தாயிடம் வன்முறையாக நடந்து கொண்டார் எனப் புகார் அளித்ததோடு அவரை ஜிஜி ப்ரேக் அப் செய்தது குறிப்பிடத்தக்கது.