மேலும் அறிய

Leo Kannada Poster: இதுவா சார் உங்க அப்டேட்..? ஃபயர் விட காத்திருந்த தமிழ் ரசிகர்கள் அப்செட்..!

லியோ கன்னட போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “அமைதியாக இரு, தப்பித்துக் கொள்” (Keep Calm and Polt Your Escape ) எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி கன்னட ரசிகர்களை ஈர்த்துள்ளது.

லியோ அப்டேட் மாதம் 

விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ படம் அக். 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பட அப்டேட் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் எகிறி  வருகின்றன.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் புதிய போஸ்டர் இன்று  அதாவது செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியாகி உள்ளது. லியோ கன்னட போஸ்டர் எனத் தெரிவிக்கப்பட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், “அமைதியாக இரு, தப்பித்துக் கொள்” (Keep Calm and Polt Your Escape ) எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர் கன்னட திரையுலகில் கவனம் ஈர்த்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதற்கான திட்டத்தை தெளிவாக வகுத்துள்ளதாகவும், படக்குழுவும் முழு உற்சாகத்துடன் இதற்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. லியோ படபூஜை தொடங்கியபோதே வெளியீட்டுத் தேதியை அறிவித்து அதற்காக ஒட்டுமொத்த குழுவும் முழுமூச்சாக உழைத்து கடந்த ஜூலை மாத மத்தியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விஜய், த்ரிஷா இருவரும் ஐந்தாம் முறையாகவும் வெகுநாள்களுக்குப் பிறகும் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சஞ்சய் தத் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஸ்கின், சாண்டி, ஜோஜூ ஜார்ஜ், மேத்யூ தாமஸ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே நா ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் லியோ இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இசைவெளியீடு எப்போ?

லியோ படத்தின் இசைவெளியீடு சென்னையில் உள்ள  நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு என தனிப்பட்ட சிறப்பு விதிமுறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி விஜய் மக்கள் இயக்கத்தில் சார்பாக மாவட்ட வாரியாக 50 நபர்களை  நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க தேர்வு செய்ய இருப்பதாகவும் கூட்ட நெரிசலில் எந்த விதமான பிரச்சனையும் நிகழாதபடி  பார்த்துகொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசைவெளியீடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தளபதி 68

லியோ படத்திற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 68. இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் இருக்கும் இந்தப் படத்திற்கான தொடக்க கட்ட வேலைகள் மிகத்தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. தந்தை மகன்  என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
America Vs Canada: கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
கெத்து காட்டிய கனடா.! அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிப்பு; இரு நாடுகளிடையே வெடித்த வர்த்தகப் போர்
Embed widget