LEO vs Vikram: விக்ரம் படத்துடன் கனெக்ட் ஆகிறதா லியோ..? இதுதான் காரணம்..!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ, லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் படத்தின் ப்ரோமோ வீடியோவை நினைவூட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ, லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் படத்தின் ப்ரோமோ வீடியோவை நினைவூட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தயாரிப்பாளர் லலித் குமார் மீண்டும் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் அர்ஜூன் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
#LEO #BLOODYSWEET 💯https://t.co/VZKg9VSD43
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 3, 2023
மேலும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் படப்பிடிப்பு:
இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ப்ரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கும் போது லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த விக்ரம் படம் தான் பலரும் நியாபகம் வருவதாக தெரிவித்துள்ளனர். அதிலும் காட்டுக்குள் இருக்கும் வீட்டில் தனியாக இருக்கும் கமலை தேடி போலீசார், அரசியல்வாதிகள் என பலரும் வருவார்கள். அதற்கு முன்பாக தயாராக துப்பாக்கி மற்றும் வாளை ரெடியாக ஆங்காங்காகே வைப்பார். பின்னர் அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிக்கும் நிலையில் கோடாரி கொண்டு தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
இதில் சாக்லேட் பேக்டரி ஒன்றில் தனியாக இருக்கும் விஜய்யை தேடி ஏராளமான கார்களில் பலரும் வருகிறார்கள். அதில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற முகமூடி அணிந்த கேரக்டர்கள் வருவது போலவும், அவர்களுடன் சண்டையிட விஜய் வாளுடன் தயாராக இருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆக மொத்தம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக லியோ இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
மேலும் படக்குழு வெளியிட்ட விமான பயணத்தின் வீடியோவில் விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கேரக்டரில் இடம் பெற்ற வசந்தி இடம் பெற்றுள்ளார். விக்ரம் படத்தில் கதைப்படி டீனா இறந்து விடுவார். ஆனால் இது முந்தைய காலக்கட்டத்தில் நடக்கக்கூடிய கதை என்பதால் கண்டிப்பாக அவரது கேரக்டர் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஜார்ஜ் மரியம் படப்பூஜையில் கலந்து கொண்டதால் கைதியின் தொடர்பும் லியோ படத்தில் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.