மேலும் அறிய

Leo Special Show: அதிக விலைக்கு விற்கப்படுகிறதா லியோ டிக்கெட்? அதிரடி காட்டிய அமுதா ஐஏஎஸ்!

லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் என்றும், இறுதிக்காட்சி 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leo Special Show: லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அதிரடி காட்டியுள்ளது. 

வரும் 19ஆம் தேதி லியோ தொடங்க உள்ள நிலையில், சிறப்பு காட்சிகள், படத்தின் ரிலீஸ், டிக்கெட் விலை என ஒவ்வொன்றாக சர்ச்சையாகியுள்ளது. லியோ படத்துக்கு சிறப்புக்காட்சிகளை ஒளிபரப்ப கேட்டு படக்குழு கோரிக்கை விடுத்த நிலையில் ஒரு நாளைக்கு 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்தது. 

அதன்படி லியோ படத்தின் முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் லியோ படத்தின் சிறப்புக்காட்சிகள் குறித்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் என்றும், இறுதிக்காட்சி 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாலை காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரூ.5000 வரை டிக்கெட் விலை ஒரு சில திரையரங்குகள் விற்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் லியோ படத்தின் சிறப்புக்காட்சியை திரையிடுவதில் விதிமுறை மீறல் நடைபெறாமல் இருப்பதை கண்காணிக்க சிறப்புக்குழு அமைத்தும் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஸ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருந்தது. இதனால் சென்சார் செய்யாத டிரெய்லரை அனுமதி பெறாமல் வெளியிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க திரையரங்கு உரிமையாளர்களுக்கு சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

இதேபோல் லியோ டிரெய்லர் ரிலீஸின் போது ரோகிணி திரையரங்கின் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணமாக லியோ இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது. இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளை வெளியீட்டுக்கு முன்பாகவே லியோ திரைப்படம் சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க: EthirNeechal Serial: அப்பத்தாவை கொல்ல பிளான்.. அப்பாவிடம் சவால் விட்ட ஜனனி.. எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?

Actress Abarnathy: சினிமாவில் என்ன 'கிழிக்க' போகிறாய்? .. நடிகை அபர்ணதியை கேள்வி கேட்டவருக்கு ஏற்பட்ட நிலைமை..!

 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget