வயசு சிக்கலா? இளம் காதலியை பிரிந்த டைட்டானிக் புகழ் டிகாப்ரியோ - வெளியான தகவல் இதுதான்!
Leo DiCaprio - Camila Morrone : நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பிரிவை உறுதிசெய்துள்ளனர் ஹாலிவுட் பிரபல நட்சத்திரங்களான லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கமிலா மோரோன்
Leo DiCaprio - Camila Morrone quits relationship : நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பிரியும் ஹாலிவுட் ஜோடிகள்
ஹாலிவுட் பிரபல நட்சத்திரங்களான லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கமிலா மோரோன் தங்களது உறவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிரிய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவர்களின் பிரிவை உறுதி செய்துள்ளது பீப்பிள் பத்திரிகை.
வயது வித்தியாசம் ஒரு காரணியாக இருக்க கூடாது:
முதன் முதலில் 2017ல் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கமிலா மோரோன் டேட்டிங் செய்ய தொடங்கினர். 25 வயதான கமிலா மோரோன், 47 வயதான லியோனார்டோ டிகாப்ரியோவுடன் டேட்டிங் செய்வது குறித்தும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. அவற்றிக்கு எல்லாம் மிகவும் கடுமையாக பதில் அளித்த கமிலா மோரோன் " ஹாலிவுட்டில் பல உறவுகள் உள்ளன, அவர்கள் மத்தியில் பெரிய வயது இடைவெளியும் உள்ளது, யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யலாம். யாருடன் நீங்கள் டேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பற்றி ஒரு அடையாளம் இருக்க வேண்டும். வயது ஒரு காரணியாக இருக்க கூடாது. " என குறிப்பிட்டுள்ளார்.
“a few weeks after her 25th birthday”
— Jet Ski Bandit (@MrFulovit) August 31, 2022
Someone forgot to tell her about Leo’s nothing over 25 rule. #LeonardoDiCaprio https://t.co/M8LKAw7YtS
இருவரின் திரை பயணம் :
கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மார்ட்டின் ஸ்கோர்செஸியின் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்-லியோனார்டோ டிகாப்ரியோ. கமிலா மோரோன், டெய்சி ஜோன்ஸ் & தி சிக்ஸின் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த இரு பிரபலங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது இதுவரையில் தெரியவில்லை.
IT’S OFFICIAL!#LeonardoDiCaprio & his gf have spilt. A source close to the couple confirmed the news to #ENews that the couple have now called it quits after more than four years together.
— Daily Leo DiCaprio (@dailyleodicapri) August 30, 2022
The good news: This means that LEO IS NOW SINGLE! https://t.co/BbbAVEHpr4 pic.twitter.com/wXiEK9x0D6