மேலும் அறிய

இயக்குநரை வலைபோட்டு தேடும் அண்ணாச்சி.. அடுத்த ரவுண்டுக்கு ப்ளான்! - நெஸ்ட் மூவி அப்டேட்!

Legend Saravanan: லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். பலரிடமும் நல்ல கதை இருக்கிறதா என்று கேட்டு வருகிறார். டைரக்டர் மாட்டும் தான் இன்னும் கிடைக்கவில்லை. யாரு அந்த அதிர்ஷ்டசாலி.

Legend Saravanan Next Movie update: அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சி... அடுத்த படத்திற்கு தயாராகும் லெஜெண்ட் சரவணன் 

சென்னையின் அடையாளமாக மாறிவிட்ட ஒரு ஸ்தாபனம் சரவணா ஸ்டோர்ஸ். அப்படி ஒரு அடையாளத்தை உருவாக்கிய ஸ்தாபனத்தின் ஒரு பிரிவான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணனின் நீண்ட நாள் கனவு சமீபத்தில் நிறைவேறியது. 

நடிப்பில் இருந்த ஆர்வம் :

ஒரு பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியது. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம் "லெஜெண்ட்". ஆனால் இப்படத்தில் நடித்ததற்காக பெரும் அளவில் சமூகவலைத்தளங்களில் ட்ரோல்  செய்யப்பட்ட ஒரு நடிகர் லெஜெண்ட் சரவணன். ஆனால் வேறு எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத ஓப்பனிங் இவருக்கு இருந்தது என்பது ஒரு மறுக்க முடியாத ஒரு விஷயம். தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது "லெஜெண்ட்" திரைப்படம் என கூறப்படுகிறது.  இருப்பினும் அண்ணாச்சியின் நடிப்பு, மேக் அப் என அனைத்தும் கிண்டலும் கேலியுமாய் பேசப்பட்டாலும் ஒரு சில திரை விமர்சனங்கள் படத்தில் தொழில்நுட்பம் சிறப்பாக இருத்தது என குறிப்பிட்டுள்ளன. அவரின் நடிப்பு பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் கூட இவர் அடுத்து என்ன செய்ய போகிறார், யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதை பற்றி எல்லாம் நிறைய பேச்சுகள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. 

இயக்குநரை வலைபோட்டு தேடும் அண்ணாச்சி.. அடுத்த ரவுண்டுக்கு ப்ளான்! - நெஸ்ட் மூவி அப்டேட்!

அண்ணாச்சியை இயக்க போகும் தொலைக்காட்சி நிறுவனம்:

லெஜெண்ட் சரவணான் சுமார் 30 - 40 கோடி ருபாய் செலவு செய்து இப்படத்தை தயாரித்தார். இவரை வைத்து யார் அத்தனை பெரிய தொகை செலவில் படம் எடுப்பார்கள் என்ற கேள்விகளுக்கு தற்போது விடை ஒன்று கிடைத்துள்ளது. ஆம் அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். நீங்கள் இந்த படத்திற்காக இவ்வளவு செலவு செய்தது சரியில்லை. செலவை கொஞ்சம் குறைத்து கரெக்டான ஒரு பட்ஜெட்டில்  ஒரு தரமான படத்தில் நீங்கள் நடிக்கலாம். கிட்டத்தட்ட 6 கோடி ருபாய் வசூல் செய்து விட்டீர்கள். அப்படி என்றால் உங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள் நிச்சயம் உங்கள் படத்தை ரசிப்பார்கள் அது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றுள்ளார் அந்த தயாரிப்பாளர். 

தயாரிப்பாளருக்கே தயாரிப்பாளரா:

லெஜெண்ட் சரவணனே ஒரு பெரிய தயாரிப்பாளர் அவருக்கு யாருடா படம் தயாரிக்கிறேன் என்று சொன்னது என்பது தானே உங்கள் கேள்வி. அது ஒரு தொலைக்காட்சி நிறுவனம். விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தான் அந்த தயாரிப்பாளர். படத்திற்கான பட்ஜெட் எல்லாம் முடிவாகிவிட்டதாம். மேலும் லெஜெண்ட் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களிடம் உங்களிடம் நல்ல கதை இருத்தல் சொல்லுங்கள் என்ற அளவிற்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. ஆனால் டைரக்டர் மட்டும் இன்னும் முடிவாகவில்லை. கூடிய விரைவில் ஒரு இயக்குனருக்கு லக் அடிக்க போகிறது ஆனால் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது தான் இன்னும் முடிவாகவில்லை. 

லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அடுத்த ரவுண்டு வர முடிவு எடுத்துவிட்டார்.  திரை ரசிகர்களை ஆவலாக காத்திருங்கள். 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Embed widget