Lata Mangeshkar Demise: ”இந்த வேதனையை எப்படி போக்குவேன்...” - லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
கமல், அமலா நடித்த ‘சத்யா’ படத்தில் லதா ஜி பாடிய வளையோசை கலகலவென பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் வசித்து வந்த பிரபல பாடகர் லதா மங்கேஷ்கர், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92. பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், “இந்திய திரை இசை வரலாற்றின் கடைசி 60 - 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தெய்வீக காந்தர்வ குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன்வசம் வைத்திருந்த ஸ்ரீ லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகிற்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே மாபெரும் இழப்பு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.” என தெரிவித்திருக்கிறார்.
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul... Lataji holds a place in our hearts that is irreplaceable…. That's how profoundly she has impacted our lives with her voice. pic.twitter.com/HEAWKaUTZs
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022
வைரலாகும் ஃப்ளாஷ்பேக்:
கமல், அமலா நடித்த ‘சத்யா’ படத்தில் லதா ஜி பாடிய வளையோசை கலகலவென பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஜூ தமிழில் ஒளிப்பரப்பான இசைக் கச்சேரி ஒன்றி இளையராஜா பேசும் போது, “கமலிடம் என்னிடம் ஒரு பீஸ் இருக்கிறது. அதை நான் இன்னும் ரெக்கார்டு செய்யவில்லை என்றேன். உடனே என்ன அது என்றார் கமல்.. உடனே நான் இந்த பீஸை வாசித்து காண்பித்தேன். உடனே இதை பாட்டாக போட்டு விடலாமே என்றார். உடனே நான் இந்த பாட்டை பாட பாடகி லதாஜிதான் வேண்டும் என்றேன். அதற்கு உடனே கமல் ஏற்பாடு செய்ய லதா ஜி வந்தார். பாட்டு எழுத வாலியும் வந்தார்.
வாலிக்கு நான் டியூனை விளக்கினேன். டியூனை கேட்டு விட்டு அவர் என்னய்யா இது? என்றார். உடனே அண்ணா இந்தப் பாடலை லதா ஜி பாடுகிறார். அவர் பாடுவதற்கு ஏதுவாக, இரட்டைக்கிளவியில் வரிகளை எழுதிக்கொடுங்கள் என்றேன். உடனே அவர் “வளையோசை கலகலவென.. பாடலை எழுதினார். பாடலை லதா ஜிக்கு சொல்லிக்கொடுத்தால் அவருக்கு உடலெல்லாம் நடுங்குகிறது. பாடி, ரெக்கார்டிங் முடித்துவிட்டு வெளியே வந்தால், பாடல் வரிகள் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் லதா ஜிக்கு உடலெல்லாம் கூனி குறுகி போய் விட்டது.” இவ்வாறு இளையராஜா பேசி இருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்