மேலும் அறிய

KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்

தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டுதிரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது. 

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும் அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் இளமை ததும்பும் காதல் கலந்த விளையாட்டுதிரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது. 

பிரபல நகைச்சுவை நடிகரும் சமூகசேவகருமான ‘கலக்கப் போவது யாரு?’(KPY) நிகழ்ச்சியின் வெற்றியாளரான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 2025ம் ஆண்டு வெளியான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது நடிப்பாலும் சமூக சேவைகளாலும்பாராட்டைப் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. 

தனது அடுத்த படத்திற்காக பல கதைகளைகேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ளதனிப்பட்ட நெருக்கத்தின் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை பாலா தேர்வு செய்துள்ளார்.பள்ளி நாட்களிலிருந்தே தீவிர பேட்மிண்டன் வீரராக இருந்து, மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் இடம்பெற்ற அனுபவம் கொண்ட பாலா, இப்படத்தின்உணர்ச்சிமிக்க கதை மற்றும் பேட்மிண்டன் பின்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 

இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமாகிறார் தானு ஹர்ஷா. நாடகக் கலைஞர்,மாடல் மற்றும் கன்னட திரைப்படங்களில் பரிச்சயமான முகமாக இருக்கும் தானு, சிறந்தபேட்மிண்டன் வீராங்கனையுமாவார் எனப்து குறிப்பிடத்தக்கது. 

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் சந்தோஷ் பிரதாப்நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் குழுவினர்: இசை – அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்,கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா. 

‘ரீமேட்ச்’ திரைப்படத்தை, BOFTA திரைப்படக் கல்லூரியின் திரைக்கதைமற்றும் இயக்கப் பிரிவில் விருது பெற்ற மாணவரும், ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற படங்களில் இயக்குநர் ராதாமோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார்எழுதி இயக்குகிறார். 

இந்த படத்தை  Zinema Media and Entertainment Ltd நிறுவனத்தின் தினேஷ்ராஜ், தயாரிப்பாளர்கள் பிரகாஷ்சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்ஜெயன் படத்தின் க்ரியேட்டிவ் மற்றும் லைன்புரொடக்ஷன் பணிகளை மேற்பார்வை செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன். 

தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலமுக்கிய பிரபலங்கள், படக்குழுவினர்மற்றும் நடிகர்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்புதொடங்கியது. இந்த நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, கேபிஒய் தாம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே கட்டமாகநடைபெறும் படப்பிடிப்பு, 2026 அக்டோபருக்குள்நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.விளையாட்டு, காதல், உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின்உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தையும் உணர்வையும் பெரிய திரையில்கொண்டு வந்து, ரசிகர்களுக்குபுதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget