மேலும் அறிய

சின்னத்திரை டூ வெள்ளித்திரை...நாயகனாக அவதாரம் எடுக்கும் KPY பாலா...

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார்

நாயகன் அவதாரம் எடுக்கும் KPY பாலா 

திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. இப்படத்திற்கு அவர் தான் கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.


இயக்குநர் ஷெரீஃப் கூறுகிறார் ‘ரணம் அறம் தவறேல்’ என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும்  “இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்த கதையை தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு. ஜெய்கிரணிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே ‘ஆம்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும் ,  தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமை நிரம்பியது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்.”

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள்:

நமிதா கதாநாயகியாக  நடிக்கிறார். தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல்  மற்றும் தேசிய விருது பெற்ற அர்ச்சனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


தொழில்நுட்பக் குழு:

இசை அமைப்பாளர்கள்: விவேக் & மெர்வின் – பட்டாஸ், சுல்தான் போன்ற படங்களில் பணியாற்றியவர்.

ஒளிப்பதிவு: பாலாஜி K ராஜா

படத்தொகுப்பு: சிவனந்தீஸ்வர் – தீரன் அதிகாரம் ஒன்று, வடக்குபட்டி ராமசாமி போன்ற படங்களில் பணியாற்றியவர்.

கலை இயக்கம்: மணிமொழியன் ராமதுரை

தயாரிப்பு மேலாளர்: உதயகுமார் பாலாஜி

வெளியீட்டு வடிவமைப்பு: தினேஷ் அஷோக்

அணிகலன் வடிவமைப்பாளர்கள்: ப்ரியா ஹாரி & ப்ரியா கரண்

பிஆர்ஓ: ரேகா

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பறக்கும் கார்! ரன்பீர் கபூர் பேச்சால் சர்ச்சை
Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?
Karthigai Deepam: இதயத்தைத் திருடிய ரவுடிகள்... ஆபரேஷன் தியேட்டரில் சாமுண்டீஸ்வரி! காப்பாற்றுவாரா கார்த்திக்?
பிக்பாஸ் வீட்டில் வெடித்த காதல் சர்ச்சை...பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள்
பிக்பாஸ் வீட்டில் வெடித்த காதல் சர்ச்சை...பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள்
Daredevil Pooja : ஷாலினி தலைமையில் தொடங்கிய டேர்டெவில் பட பூஜை..அஜித் ஆப்சண்ட்
Daredevil Pooja : ஷாலினி தலைமையில் தொடங்கிய டேர்டெவில் பட பூஜை..அஜித் ஆப்சண்ட்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
Embed widget