மேலும் அறிய

Pongal Movie Release: கொரோனா கட்டுப்பாடுகள்: நஷ்டமாகுமா? காசு பார்க்குமா? ரிலீசாகும் 'ரிஸ்க்' பொங்கல் படங்கள்!

Pongal Movie Release Tamil 2022: சென்னையின் சில திரையரங்குகளிலும் கூட அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்களாம்

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பொங்கள் , தீபாவளி போன்ற படங்களை குறி வைத்து படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று என்றாலும் , இம்முறை மீண்டும் பூதாகரமாகும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக வலிமை, ஆர்.ஆர்.ஆர் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் இதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத  லோ- பட்ஜெட் திரைப்படங்கள் சில திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. 

1.என்ன சொல்ல போகிறாய் !

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான அஷ்வினின்’என்ன சொல்ல போகிறாய்’ புரமோஷன் நிகழ்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  அஸ்வினுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை நம்பி , சென்னையின் சில திரையரங்குகளிலும் கூட அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்களாம். ஹரிஹரன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம்  ரொமாட்டிக் ஜானரில் உருவாகியுள்ளது. படத்தில் தேஜு மற்றும் அவந்திகா மிஸ்ரா கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

2.நாய் சேகர் :

காமெடி நடிகர் சதீஷ் முதன் முதலாக கதாநாயகான களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘நாய் சேகர்’. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நாயகியாக நடித்துள்ளார். ஒரு மனிதன் நாயாக நடந்துக்கொண்டால் எப்படியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள நாய் சேகர் அமைதியாக வெற்றியை எட்டும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

3.தேள் 

நடன இயக்குநரும் , நடிகருமான பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தேள்.இந்த படத்தை நடிகரும் நடன இயக்குனருமான ஹரிகுமார் இயக்கியிருக்கிறார். கோமாளி படத்தி நாயகி சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.படம் முன்னதாக டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் , நாளை (ஜனவரி 14 ) நேரடியாக திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Pongal Movie Release: கொரோனா கட்டுப்பாடுகள்: நஷ்டமாகுமா? காசு பார்க்குமா? ரிலீசாகும் 'ரிஸ்க்' பொங்கல் படங்கள்!
4. கார்பன் : 

வித்தார்த் மற்றும் தன்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்குநர் சீனுவாசன் இயக்கயுள்ளார். இந்த திரைப்படம் போகி பண்டிகையான இன்று வெளியாகியிருக்கிறது. கார்பன் வித்தார்த்தின் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Pongal Movie Release: கொரோனா கட்டுப்பாடுகள்: நஷ்டமாகுமா? காசு பார்க்குமா? ரிலீசாகும் 'ரிஸ்க்' பொங்கல் படங்கள்!

5.கொம்பு வச்ச சிங்கம்டா : 

சசிகுமார் மற்றும் மெடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்த படத்தை சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்,ஆர்,பிரபு இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்ட நிலையில் தற்போதுதான் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget