மேலும் அறிய

H. Vinoth : ”சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி”.. இயக்குநர் எச்.வினோத்திற்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்..!

இயக்குநர் எச் வினோத் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்

இயக்குநர் எச். வினோத்தின் பிறந்தநாளன்று அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

எச் வினோத்

சதுரங்க வேட்டைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் எச். வினோத். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய தீரன் திரைப்படம்  மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் வளர்ந்து வரும் நம்பிக்கை இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார் எச் வினோத். மேலும் மிகப்பெரிய ஸ்டார் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார் அவர். அதுவும் ஒரு முறை அல்ல மூன்று முறைகள்.

நேர்கொண்ட பார்வை

தனது மூன்றாவது படமாக பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற பிங் திரைப்படத்தை ரீமேக் செய்தார் எச். வினோத். மிகப்பெரிய மாஸ் நடிகரான அஜித்  குமாரின் கரியரில் மாறுபட்ட கதைக்களத்தில் தனித்துவமான படமாக இந்தப் படம் அமைந்தது.

வலிமை

இதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் இரண்டாவது முறையாக அஜித் குமாருடன் கூட்டணி அமைத்தார் வினோத். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றி பெறவில்லை. மேலும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது.

துணிவு

எச் வினோத் அஜித் குமாரை வைத்து இயக்கிய மூன்றாவது படம் துணிவு. வலிமை படத்தின் தோல்வியை இந்தப் படத்தில் வினோத் மீட்டெடுத்தார் என்று சொல்லலாம். வசூல் ரீதியாக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சமூக அக்கறையுள்ளப் படங்களை கமர்ஷியல் வடிவில் இயக்க முயற்சிப்பதே எச் வினோத் அவர்களின் தனித்துவம் என்று சொல்லலாம்.

அடுத்தது கமல்

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை  இயக்க இருக்கிறார் எச். வினோத் . சமீபத்தில் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக கமல் வெளியிட்டார். கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது.

வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

 இன்று எச். வினோத் தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். ” சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”  என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Pa Ranjith: மனிதாபிமானமற்ற செயல்களின் வேர்தான் சனாதனம்.. அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய பா. ரஞ்சித்!

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget