மேலும் அறிய

KGF actor death: கேஜிஎஃப் நடிகர் பெங்களூருவில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

உடல்நல குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேஜிஎஃப் நடிகர் மோகன் ஜூனேஜா, இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.

கேஜிஎஃப் 1,2 படங்களில் நடித்தவரும் கன்னட நடிகருமான மோகன் ஜூனேஜா இன்று காலை மரணமடைந்தார். 54 வயதான அவர், பல ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் அவர் உயிரிழந்திருக்கிறார். 

யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. கே.ஜி.எஃப் 1 பாகம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இராண்டாம் பாகமானா இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்த நிலையில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

ஜேஜிஎஃப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனியாக கவனிக்க வைத்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களது கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,  கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாயின் பெருமைகளை பேசும் கதாப்பாத்திரங்களில், பத்திரிக்கையாளரிடம் பழைய கதையை சொல்லும் கதப்பாத்திரத்தில் மோகன் ஜூனேஜா என்பவர் நடித்திருப்பார்.

அவர், பல கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். உடல்நல குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அவர், சாண்டில்வுட்டில் கவனிக்க வைத்த காமெடி நடிகராக வலம் வந்திருக்கிறார். அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தும்கூரில் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ‘கேஜிஎஃப் 2’ உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தங்கல், பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு 1000 கோடி வசூலித்த நான்காவது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்த தகவலை படத்தை தயாரித்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
பிஷ்னோய் கும்பல் அச்சுறுத்தல்.. இரண்டு பாலிவுட் நடிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
Kanda Sashti: கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
Embed widget