'கேரள அரசின் 52-வது மாநில திரைப்பட விருதுகள்' சிறந்த நடிகையாக ரேவதி தேர்வு..!
பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகளுக்காக 147 திரைப்படங்கள் கலந்து கொண்டன. அதில் ஆவாச வியூகம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கேரள அரசு 52-வது மலையாளத் திரைப்படங்களுக்கான மாநில விருதுகளை அறிவித்துள்ளது. கேரள அரசு ஆண்டுதோறும் திரைப்படங்களுக்காக விருதுகளை அறிவிக்கும் நிலையில், இந்தாண்டுக்கான விருதுகளின் பட்டியலை கேரள அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. ஷாஜி செரியன் வெளியிட்டுள்ளார். சிறந்த நடிகராக பிஜூ மேனனும், ஜோஜூ ஜார்ஜ்-ம் தேர்வாகி இருக்கும் நிலையில் நடிகை ரேவதி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகளுக்காக 147 திரைப்படங்கள் கலந்து கொண்டன. அதில் ஆவாச வியூகம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதினை இயக்குனர் திலீஷ் போத்தன், ஜோஜி ( Joji ) திரைப்படத்திற்காக பெற்றிருக்கிறார்.
சிறந்த திரைப்படம் – ஆவாச வியூகம்
இயக்குனர் கிரிஷந்த் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம் சமூகத்தில் நடக்கும் விசயங்களை விமர்சிக்கும் விதத்திலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை குறித்தான பார்வைகளையும் பேசுகிறது. இப்படம் 26-வது சர்வதேச கேரள திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் கலந்து கொண்டு பரவலான கவனத்தை பெற்றது.
சிறந்த திரைப்படம் ( இரண்டாமிடம் ) – நிஷிதோ
தாரா ராமானுஜம் இயக்கியுள்ள இத்திரைப்படம் கேரளாவில் குடியேறிய சிலைகளை செய்து விற்பனை செய்யும் பெங்காளி பெண்ணுக்கு, அவளது மாமாவின் உடலை அடக்கம் செய்ய ஒரு தமிழ் பெண்ணின் உதவி தேவைப்படுகிறது. அந்த உதவியை பெற நிகழும் சம்பவங்கள் குறித்து இத்திரைப்படம் பேசுகிறது. சர்வதேச கேரளா திரைப்பட விழாவில் இத்திரைப்படம் போட்டி பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த திரைப்படம் ( இரண்டாமிடம் ) – சாவிட்டு
இத்திரைப்படத்தை சஜஸ் ரஹ்மான் மற்றும் ஷினோஸ் ரஹ்மான் இயக்கியுள்ளார்கள். ஆவணப்பட வடிவிலான இத்திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
சிறந்த இயக்குனர் ( ஜோஜி-Joji ) – திலீஸ் போத்தன்
திலீஸ் போத்தன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை அமைக்கப்பட்டது. ஃபஹத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.
சிறந்த திரைக்கதை ( நாயாட்டு - Naayaattu) – ஸ்ரீகுமரன் தம்பி
நாயாட்டு காவல்துறைக்குள் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட திரைக்கதை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கைப்பாவையாக செயல்படும் காவல்துறை குறித்து பேசுகிறது. காவல் பணியினரையே பலிகடாவாக்க தயங்காது காவல்துறை என்பதினை அழுத்தமாகச் சொல்கிறது.
சிறந்த திரைக்கதை - தழுவல் (Adapted ) ( ஜோஜி-Joji ) - ஷியாம் புஸ்கரன்
ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தினை தழுவி கேரளாவின் ஒரு மலைப்பாங்கான கிராமத்தின் ஒரு வழமையான தோட்டங்களைக் கொண்ட குடும்பத்திற்குள் இருக்கும் உறவுகளுக்குள் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது இத்திரைக்கதை.
கேரள அரசின் விருதுகளை பெற்ற திரைப்படங்களின் பட்டியல்
சிறந்த படம்- ஆவாச வியூகம் மற்றும் சாவிட்டு
சிறந்த படம் ( இரண்டாமிடம் ) - நிஷித்தோ மற்றும் சாவிட்டு
சிறந்த குழந்தைகள் திரைப்படம் – காடகளம்
சிறந்த பிரபலமான திரைப்படம் – ஹிருதயம்
நடுவர்களின் சிறப்பு தேர்வு – ஜோ பேபி ( ஃப்ரீடம் ஃபைட் )
சிறந்த நடிகர் - பிஜு மேனன் (ஆர்க்கரியம்) மற்றும்
ஜோஜு ஜார்ஜ் ( மதுரம் ) (ஃப்ரீடம் ஃபைட் ) ( துரமுகம் ) ( நாயாட்டு )
சிறந்த நடிகை - ரேவதி 'பூதகாலம்'
சிறந்த குணச்சித்திர நடிகை விருது : உன்னி ( ஜோஜி )
சிறந்த குணச்சித்திர நடிகர் விருது : சுமேஷ்மோர் ( காலா )
சிறந்த குழந்தை நட்சத்திரம் ( பெண்) – ஸ்னேகா அணு ( தல )
சிறந்த குழந்தை நட்சத்திரம் ( ஆண் ) – ஆதித்யன் ( நிறய ததகளுள்ள மரம் )
சிறந்த இயக்குனர் -திலீஷ் போத்தன் (ஜோஜி)
சிறந்த இசையமைப்பாளர் – ஹெசம் அப்துல் வஹாப் (ஹிருதயம்)
சிறந்த இசையமைப்பாளர் ( பின்ணனி) – ஜஸ்டின் வர்கீஸ் ( ஜோஜி )
சிறந்த ஒளிப்பதிவாளர் - மது நீலகண்டன் (சுருளி)
சிறந்த திரைப்பட எடிட்டர் - மகேஷ் நாராயணன் மற்றும் ராஜேஸ் ராஜேந்திரன் (நாயாட்டு)
சிறந்த கலை இயக்குனர் – ஏ வி கோகுல்தாஸ் ( துரமுகம் )
சிறந்த கதையாசிரியர் - ஷாஹி கபீர் (நாயாட்டு)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - கிரிஷாந்த் ஆர்.கே (ஆவாச வியூகம் )
சிறந்த பின்ணனி பாடகர் ( ஆண் ) – பிரதீப் குமார் ( மின்னல் முரளி )
சிறந்த பின்ணனி பாடகர் ( பெண் ) – சித்தாரா கிருஷ்ணகுமார் ( கானேக்கானே)
சிறந்த பாடலாசிரியர் – பி கே ஹரிநாராயணன் ( காடகளம் )
சிறந்த ஒலி வடிவமைப்பு – ரெங்கநாத் ரவி ( சுருளி )
சிறந்த ஒலிக்கலவை – ஜஸ்டின் ஜோஸ் ( மின்னல் முரளி )
சிறந்த ஒலிப்பதிவு - அருண் அசோக் மற்றும் சோனு ( சாவிட்டு )
சிறந்த நடன அமைப்பு – அருண் லால் ( சாவிட்டு )
சிறந்த பின்ணனி குரல் – தேவி எஸ்
சிறந்த ஒப்பனை கலைஞர் – ரஞ்சித் அம்பாடி ( ஆர்காரியம் )
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – மெல்வி ஜே ( மின்னல் முரளி )
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – ஆண்ட்ரூ டி’க்ரூஸ் ( மின்னல் முரளி )