Keerthy Suresh New Movie : கே.ஜி.எஃப் படத்தயாரிப்பாளருடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன படம் தெரியுமா?
Keerthy Suresh New Movie: முதன் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹொம்பாலே தயாரிப்பு நிறுவனம் களம் காணவுள்ளது
2000 ஆம் ஆண்டில் “பைலட்ஸ்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினி உலகில் கால் அடி எடுத்துவைத்தார் கீர்த்தி சுரேஷ். பின்பு சில மலையாள படங்களில் நடித்த இவர், “இது என்ன மாயம்” என்ற படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் புது ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன், “ரஜினி முருகன்”, “ரெமோ” போன்ற படங்களில் நடித்த அவர் “மஹாநதி” என்ற படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். இதனையடுத்து விஜயுடன் பைரவா படத்தில் ஜோடியாகவும், அண்ணாதே படத்தில் ரஜினிக்கு தங்கையாகவும் கீர்த்தி நடித்தார். இறுதியாக, ஓடிடி தளத்தில் வெளியான “சாணி காயிதம்” படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் அடுத்தப்பட அப்டேட் வெளியாகி இருக்கிறது.
Most happening production house #HombaleFilms, announced their first debut #Tamil movie, #Raghuthatha⭐️ing @KeerthyOfficial, #MSBhaskar & Directed by @sumank, Produced by @VKiragandur.@hombalefilms @HombaleGroup @yaminiyag @RSeanRoldan @editorsuresh @RaghuthathaFilm @proyuvraaj pic.twitter.com/h396vjLKVV
— Rajasekar (@sekartweets) December 4, 2022
கேஜிஎஃப், காந்தாரா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்க களம் இறங்கியுள்ளது. இப்படத்தை அறிமுக டைரக்டர் சுமன் குமார் இயக்க, அதில் கீர்த்தி சுரேஷ் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு “ரகு தாத்தா” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
கீர்த்தி சுரேஷ், “ஏக் கௌமே ஏக் கிசாத் ரகு தாத்தா” என்ற கேப்ஷனுடன் அப்படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் அறிவிக்கப்படாத ப்ராஜக்ட்
நடிகர் கீர்த்தி சுரேஷ் தனது நாய்க்குட்டியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்க்குட்டியுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். புகைப்படங்களுக்கான கேப்ஷனில், “கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் தங்கியுள்ளேன். ஒரு அறிவிக்கப்படாத ப்ராஜக்டுக்காக இங்கே தங்கியிருக்கிறேன். தங்கியிருந்த நாட்களில் இங்கே நிறைய நல்ல நினைவுகளைச் சேமித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.