Keerthy Suresh: அட்லீ மனைவி பிரியாவுடன் ‘ஜவான்’ பாடலுக்கு ஜாலி டான்ஸ்.. கீர்த்தி சுரேஷூக்கு ஃபயர் விடும் நெட்டிசன்கள்!
ஜவான் பட பாடலுக்கு இயக்குநர் அட்லீ மனைவி பிரியாவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடனமாடி பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டெம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் இதுவரை இந்த திரைப்படங்கள் புரிந்திராத பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளைப் படைத்து வருகிறது.
கீர்த்தி சுரேஷ் வைரல் வீடியோ
கோலிவுட் டூ பாலிவுட் பயணித்து அங்கு முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷாவாகக் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஷாருக்கானை அட்லீ இயக்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.
படம் கடந்த ஆறு நாள்களில் 596 கோடிகள் வரை வசூலித்துள்ளது. நாளை இப்படம் 600 கோடிகளை வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு முன்னதாக வெளியான ஷாருக்கின் பதான் பட வசூலைக் கடக்கும் எனவும், ஆயிரம் கோடிகளுக்கும் மேல் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜவான் பட பாடலுக்கு இயக்குநர் அட்லீயின் மனைவியான ப்ரியா அட்லீயுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடனமாடி வீடியோ பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷின் செல்ல நாயுடன் அட்லீ இருவரையும் சுற்றி சுற்றி வரும் நிலையில், ரகளையாக இருவரும் நடனமாடியுள்ள காட்சிகள், இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.
View this post on Instagram
ஜவான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கீர்த்தி சுரேஷ் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ் அள்ளி வருகிறது.
சாதனை படைக்கும் ஜவான்
ஜவான் படம் ரிலீஸூக்கு முன்பே வரலாறு காணாத வகையில் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றது. மேலும் இப்படத்தின் மூலம் அனிருத்தும் பாலிவுட்டில் கால் பதிக்கும் நிலையில், பாடல்களும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஜவான் படம் வெளியான முதல் நாளே ரூ.129 கோடிகளை வசூலித்தது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியான நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த ஆடியன்ஸைக் கவர்ந்து ஜவான் மாபெரும் ஹிட் படமாக உருவெடுத்துள்ளது உலகளவில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக 384.69 கோடி பாக்ஸ் ஆபிசில் வசூலைக் குவித்த நிலையில், ஷாருக் மனைவி கௌரியின் ரெட் சில்லீஸ் நிறுவனம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது.
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி இந்தியில் கால் பதித்த நிலையில் அவரது கதாபாத்திரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான வில்லன் கதாபாத்திரமாக அமைந்து தமிழ் ரசிகர்களை விஜய் சேதுபதி கதாபாத்திரம் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.