மேலும் அறிய

Karu Palaniappan: விரைவில் நேரடி களம்.. பணம் சம்பாதிக்கிற இடம் அரசியல் இல்லை.. கரு.பழனியப்பன் அதிரடி..!

அரசியலை பணம்  சம்பாதிக்கும் இடமாக பயன்படுத்தக்கூடாது என தான் நினைப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அரசியலை பணம்  சம்பாதிக்கும் இடமாக பயன்படுத்தக்கூடாது என தான் நினைப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

திரைத்துறையில் கரு.பழனியப்பன்

1994 ஆம் ஆண்டில் இருந்து கரு.பழனியப்பன் திரைத்துரையில் இருந்து வருகிறார். புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் இயக்குநர் பார்த்திபனிடமும், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களில் இயக்குநர் எழிலிடமும் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு பார்த்திபன், சினேகா நடித்த பார்த்திபன் கனவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். அந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு சிவப்பதிகாரம், 2008ல் பிரிவோம் சந்திப்போம், 2010 ஆம் ஆண்டில் மந்திர புன்னகை, 2011ல் சதுரங்கம் 2013 ஆம் ஆண்டில் ஜன்னல் ஓரம் படத்தையும் இயக்கினார். இதில் மந்திர புன்னகை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இதற்கிடையில் நட்பே துணை, கள்ளன், நதி, டி பிளாக், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் கரு.பழனியப்பன் தனது  முத்திரையை பதித்துள்ளார். 

சின்னத்திரை பயணம் 

இதற்கிடையில் சின்னத்திரையில் களம் கண்ட அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ”தமிழா தமிழா” நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா  நானா நிகழ்ச்சிக்குப் பிறகு அதிக பார்வையாளர்களைப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் இருந்து தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் உரிமை எடுத்து பங்கேற்பவர்களையும் அவ்வப்போது கண்டிப்பார் கரு.பழனியப்பன். இது கடும் விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்போது அவர் வா தமிழா வா என்ற புதிய விவாத நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரை பார்வையாளர்களை மகிழ்விக்க வருகை தருகிறார். கலைஞர் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. 

அரசியல் பயணம்

இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கரு.பழனியப்பன், தனது அரசியல் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “நேரடி அரசியலில் இறங்க விருப்பம் எனக்கு இருக்கும் நிலையில், அதற்கான பணம் என்னிடம் இல்லை.  பணம் இல்லாதவர்களுக்கு அரசியலில் இடமிருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கு. மேலும் திமுக போன்ற கட்சிகளில் எளிய மனிதர்கள் இன்னும் பொறுப்பில் இருக்காங்க. அதனால் கொஞ்சம் பணம் சம்பாதிச்சு பிள்ளைகளை படிக்க வச்சுட்டு வரணும். என்னை பொறுத்தவரை பணம் சம்பாதிக்கிற இடமா அரசியலை பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget