(Source: ECI/ABP News/ABP Majha)
"உடம்பு முழுக்க காயம்…" - விபத்துக்கு பின் அஜித்தை கேரவனில் சந்தித்த கார்திகேய கும்மக்கொண்டா!
அவருக்கு நினைப்பு மொத்தமும் வண்டிய ரெடி பண்றதுலயே இருந்தது. அவர் உடல்நிலையை பற்றி யோசிக்கவே இல்ல. விழுந்த இடத்துல இருந்து நானும் அவரும்தான் பைக்ல வந்தோம், நான் ஒட்டின பைக்க அவரு ஓட்டினார்.
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. 'வலிமை' படத்தின் தமிழ் பதிப்பு சென்சாரகி, CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 24 அன்று இந்த படம் வெளியாக உள்ளது. வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார். இவர் கடைசியாக சாவு கபுரு சல்லகாவில் நடித்தார், ராஜா விக்ரமார்கா என்ற உளவு சார்ந்த திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீ சாரிபலி இயக்கியிருக்கும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சாய் குமார், தணிகெல்ல பரணி, பசுபதி, ஹர்ஷ வர்தன், சுதாகர் கோமகுலா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வலிமை திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் ப்ரோமோஷன் வேளைகளில் படக்குழு பிசியாக உள்ளது. அதில் ஒரு பகுதியாக நடிகர் கார்திகேயா கொடுத்த பேட்டியில் அஜித்துக்கு நிகழ்ந்த விபத்து குறித்து பேசியுள்ளார். "அந்த விபத்து நடந்து, ரொம்ப கேஷுவலா எழுந்து நடந்து வந்துட்டார். படக்குழு பயந்து போய் கேக்கும்போது ஒன்னும் இல்லன்னு சொல்லி, அவரோட நண்பர்கள்கிட்ட சொல்லி உடனே அதே வண்டி தயார் பண்ற வேலைல இறங்குனார். அவருக்கு நினைப்பு மொத்தமும் வண்டிய ரெடி பண்றதுலயே இருந்தது. அவர் உடல்நிலையை பற்றி யோசிக்கவே இல்ல. விழுந்த இடத்துல இருந்து நானும் அவரும்தான் பைக்ல வந்தோம். நான் ஒட்டின பைக்க அவரு ஓட்டினார்.
கேரவன் உள்ள போனதும், சட்டையை கழற்றினார். அவ்வளவு காயம் இருந்தது. அதனை யாரிடமும் சொல்லாமல் வண்டியை பற்றியும், ஷூட்டிங்கை பற்றியும் மட்டுமே முழு கவனமும் அவருக்கு இருந்தது. ஏன் சொல்லல என்று கேட்டபோது, ஏற்கனவே செட் மொத்தமும் எனக்கு என்ன ஆகுமோன்னு பயந்துடுச்சு. இதுல நானும் பிரேக் ஆகிருந்தா, மொத்த செட்டும் குழம்பிடும். ஷூட்டிங் ஒழுங்கா நடக்கணும், இதுல பல பேரோட டேட் இருக்கு, உழைப்பு இருக்கு. உங்களோட டேட் இருக்குன்னு ரொம்ப தெளிவா பேசினார். அவர் எப்போவும் ஒன்னு சொல்லுவார், எது செஞ்சாலும் அந்த நோக்கத்துல தீர்க்கமா இருக்கணும்னு சொல்லுவார். அதைதான் நான் ஃபாலோ பன்றேன்." என்று கூறினார்.