Malavika mohanan.. "என்ன படம் பாக்குறது?” : மாளவிகா மோகனன் கேள்விக்கு பதில் சொன்ன எம்.பி., கார்த்தி சிதம்பரம்
நடிகை மாளவிகா மோகனின் கேள்விக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி, பதிலளித்தது நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனின் கேள்விக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி பதிலளித்தது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.
பிரபல நடிகையான மாளவிகா மோகனன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது இவரது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது நல்ல வெப் சீரிஸ், திரைப்படங்களை பரிந்துரை செய்யுங்கள் என்று ட்விட் செய்தார்.
Looking for some good new series/movies recommendations. Any suggestions? ☺️
— malavika mohanan (@MalavikaM_) May 20, 2022
இந்த ட்விட்டை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை ட்விட் செய்ய, சிவகங்கை எம்.பியும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரமும் தன் பங்குக்கு Inventing Anna பாருங்க என்று ட்விட்டை தட்டிவிட்டார். அவ்வளவுதான்.. இதைப்பார்த்து படையெடுத்து வந்த நெட்டிசன்கள் மீம்களை அள்ளி வீசி அவரை கலாய்த்து வருகின்றனர்.