ராஜ்கமல் பிலிம்ஸை உச்சத்தில் நிறுத்திய இரு படங்கள்..அமரன் , விக்ரம் மொத்த வசூல் இதான்
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த அமரன் மற்றும் விக்ரம் ஆகிய இரு படங்களும் உலகளவில் 700 கோடி அசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ராஜ்கமல் ஃபிலிம்ஸ்
1981-ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தனது முதல் படமாக கமலின் ராஜபார்வை படத்தை தயாரித்தது. கமல்ஹாசன் மாதவி , ஒய்,ஜி, மகேந்திரன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ராஜ்கமல் நிறுவனங்கள் தயாரிப்பில் வெளியான பல படங்கள் தமிழ் சினிமாவில் தலைசிறந்த படங்கள் என்று சொல்லலாம். இந்தத் திரைப்படங்களில் கமலஹாசனின் பங்கு தவிர்க்கமுடியாதது . கமர்ஷியல் திரைப்படமாக இருந்தாலும் கலைப்படமாக இருந்தாலும் இப்படங்கள் மற்ற படங்களைக் காட்டிலும் மாறுபட்டவை. இந்தத் திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளன . விக்ரம் , சத்யா , குருதிப்புனல் , சதிலீலாவதி , அபூர்வ சகோதரர்கள் , தேவர்மகன் , ஹே ராம் , விருமாண்டி, விஸ்வரூபம் உள்ளிட்டவை ஆர்.கே.எஃப்.ஐ தயாரித்த படங்கள். இதன்பிறகு வெளியான விஸ்வரூபம் , கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றி பெறவில்லை.
விக்ரம்
2019 முதல் 2022 வரை கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் படம் வெளியாகவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் உலகளவில் ரூ 500 கோடி வசூலித்து சரிந்திருந்த அந்நிறுவனத்தை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு வந்தது என சொல்லலா.
அமரன்
விக்ரம் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அடுத்தடுத்து சில படங்களை தயாரித்து வருகிறது. அதில் ஒன்றுதான் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ள அமரன் திரைப்படம். விக்ரம் படம் போலவே கமலுக்கு மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது அமரன். உலகளவில் இப்படம் இதுவரை 300 கோடிகள் வசூலித்து இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமரன் , விக்ரம் மொத்த வசூல்
அமரன் மற்றும் விக்ரம் ஆகிய இரு படங்கள் உலகம் முழுவதும் 800 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரு படங்களின் வெற்றி அடுத்தடுத்து இன்னும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் உருவாக வழிவகுக்கும் என நம்பலாம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கியுள்ள கமலின் தக் லைஃப் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் எஸ்.டி.ஆர் 48 படத்தையும் தயாரிக்க இருக்கிறது.
மேலும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக வெப் சீரிஸ் ஒன்றும் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.