Aniruth: கமல், ரஜினி, ஷாருக்கான் முத்த மழையில் நனையும் அனிருத்... காரணம் ஒன்னு தான்..!
கமல், ரஜினி, ஷாருக்கான் பிரபலங்களின் முத்த மழையில் நனைந்து வரும் அனிருத்
கமல்ஹாசன், ரஜினிகாந்த் தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானிடமும் அனிருத் முத்தம் வாங்கியுள்ளார்.
2012ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் மூலம் சினிமாவின் இசை உலகில் நுழைந்த அனிருத் இன்று தவிர்க்க முடியாத இசைக்கலைஞராகவும், பாடகராகவும் உயர்ந்துள்ளார். சிவகார்த்திக்கேயனின் எதிர்நீச்சல், மிர்ச்சி சிவானின் வணக்கம் சென்னை, விஜய் நடித்த கத்தி, ரஜினியின் பேட்ட, ஆந்தாலஜி படமான பாவக்கதைகள், தனுஷின் வேலையில்லாத பட்டதாரி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான், மாரி, அஜித்தின் வேதாளம், ரெமோ, மாஸ்டர், டாக்டர், காத்துவாக்குல ரெண்டு காதல், அஜித் நடித்த விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், நயன்தாராவின் கோலமாவு கோகிலா உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களுக்கு இசை அமைத்து கலக்கினார் அனிரூத்.
அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என ஸ்டார் நடிகர்களுக்கு இசை அமைத்த அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இசை அமைக்க தொடங்கினார். பேட்ட படத்தை தொடர்ந்து தற்பொது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ஜெய்லர் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஆக்ஷனில் மாஸ் காட்டும் ரஜினிக்கு கூஸ்பம்பாக அமைந்தது அனிருத்தின் பின்னணி இசை. அதற்கேற்றார் போல் ஹூக்கும் பாடலான தலைவரு அலப்பறை மியூக்கும், அனிருத் குரலும் ரஜினி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இதற்கு முன்னதாக கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திலும் தனது பாணியில் இசையால் மாஸ் காட்டி இருந்தார் அனிருத். அதை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜவான் படத்திலும் அனிருத்தின் இசை மிரள செய்துள்ளது. ஜவானில் அனிருத் இசையில் வெளிவந்த ‘வந்த எடம்’ பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இசையால் பாலிவுட் ஸ்டாரையே தன் பக்கம் ஈர்த்த அனிருத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் படத்தில் இசை அமைத்ததற்காக அதன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தை கட்டிப்பிடித்து கமல்ஹாசன் முத்தம் கொடுத்து இருப்பார். அதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ரஜினி, அவரது இசையை புகழ்ந்தார்.
Rockstar. pic.twitter.com/3UBI5j6Bcj
— LetsCinema (@letscinema) August 30, 2023
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜவான் பிரீ ரிலீஸ் விழாவில் அனிருத்துடன் இணைந்து நடனமாடிய ஷாருக்கான், அவரை தனது மகன் என்றே கூறினார். விழா மேடையில் அனிருத்தை கட்டிப்பிடித்து முத்தமழையை பொழிந்து தனது அன்பை வெளிப்படுத்தினார் பாலிவுட்டின் மெகா ஸ்டாரான ஷாருக்கான். தொடர்ந்து கமல், ரஜினி, ஷாருக்கான் பிரபலங்களின் முத்த மழையில் நனைந்து வரும் அனிருத் இளம் வயதிலேயே இசை உலகில் தனக்கென தனி இடைத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.
Worth celebration!! The way south people shower love and positivity on Shah Rukh Khan 😭🔥#JawanPreReleaseEvent pic.twitter.com/IMKNZPmNHm
— MAHA SRK FAN (@MahaanSRK) August 30, 2023
பாலிவுட்டில் முதன் முதலாக இசை அமைத்துள்ளதால் அங்கும் அனிருத்திற்கு சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாக பலரும் வாழ்த்தி வருகின்றனர்.