Kamal as Villan: பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்... 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா? வெளியான வாவ் அப்டேட்
நடிகர் பிரபாஸ் நடிக்கும் பிரமாண்டமான படமான 'ப்ரொஜெக்ட் கே' (Project K) படத்தில் அவருக்கு வில்லனாகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்(Kamal Haasan) என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜயசாந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகை தீபிகா படுகோன்(Deepika Padukone). மேலும் இப்படத்தில் திஷா பதானி, அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தென்னிந்திய சினிமா கண்டிராத பிரமாண்டம் :
இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரம்மாண்டமான படமாக 'ப்ரொஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் கொரோனா காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியன் படமாக உருவாக உள்ளது. தயாரிப்பாளர் குழு படத்தை ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வில்லனாகும் கமல்:
மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் இணைகிறார் உலக நாயகன் கமல்ஹாசன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ள 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் அவர் அப்படத்தில் ஒரு வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் மூலம் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் உடன் திரையை பகிர உள்ளார் உலகநாயகன் என்பது திரை ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
உற்சாகத்தில் ரசிகர்கள் :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார் கமல். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் மணிரத்னம் இயக்கும் KH234 படத்தில் இணைய உள்ளார். உலகநாயகன் மீண்டும் சினிமாவில் கலக்கி வருவது அவரின் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.