kamal haasan: ‛தலைவனாக அல்ல தமிழனாக சாக வேண்டும்’ -கொந்தளித்த கமல்ஹாசன்!
தலைவனாக சாக வேண்டும் என்பது முக்கியமில்லை. தமிழனாக சாகவேண்டும் என்று கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.
பிரபல யூடியூப் சேனலான கலாட்டா ‘விக்ரம்’ படத்தின் 50 நாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
View this post on Instagram
அப்போது பேசிய கமல்ஹாசன் , “ நான் அரசியலுக்கு வந்த போது சில மந்திரிகள் எனக்கு மார்க்கெட் குறைந்து விட்டதால் நான் அரசியலுக்கு வந்து விட்டதாக சொன்னார்கள். அவர்கள்தான் அப்படி வந்திருப்பார்கள். நான் அப்படி இல்லை. இந்த மக்களுக்கு கொடுக்க வேண்டியதை இப்படித்தான் கொடுக்க முடியும். தலைவனாக சாக வேண்டும் என்பது முக்கியமில்லை. தமிழனாக சாகவேண்டும்.
View this post on Instagram
இதுதான் எனக்கு மிக முக்கியம். நான் நவ-அரசியல் கலாச்சாரவாதி. அரசியல்வாதி இல்லை. நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால், அரசியல் உங்களை பாதிக்கும். இதில் நீங்கள் எந்த கட்சியில் இருக்கிறீர்கள், இணைகிறீர்கள் என்பது பற்றியதல்ல. அவை முன்னேற்றத்தை நோக்கி செயல்படும். நீங்கள் காந்தியை, அம்பேத்கர், நேருவை பார்த்து இருக்கிறீர்கள்.
நீங்கள் மிகவும் சிறப்பான இடத்தில் இருக்கிறீர்கள். இந்தியா மகத்துவதற்கு தயாராக உள்ளது. இதை கெடுக்க வேண்டும் என்றால் நீங்கள்தான் கெடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் நீங்கள்தான். தலைவன் இல்லை என்றால் நீங்கள் தலைவன் ஆகிவிடுங்கள். அதனால்தான் நான் தலைவன் ஆனேன். தகுதியை விட, திறமையை விட உணர்வு எனக்கு இருக்கிறது.” என்று பேசினார்.
முன்னதாக, லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியிலும் விக்ரம் படம் சக்கைப்போடு போட்டது.
விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், இப்போது வம்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்