![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kamal Haasan-Muthiah: 25 நாட்கள் கால்ஷீட்.. இயக்குநர் முத்தையாவுடன் கைகோக்கும் கமல்..!
நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் முத்தையாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Kamal Haasan-Muthiah: 25 நாட்கள் கால்ஷீட்.. இயக்குநர் முத்தையாவுடன் கைகோக்கும் கமல்..! Kamal Haasan next movie with director muthiah after Vikram Check Details Tamil Cinema News Kamal Haasan-Muthiah: 25 நாட்கள் கால்ஷீட்.. இயக்குநர் முத்தையாவுடன் கைகோக்கும் கமல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/f1ab9db5b4d4671db6efe4a9dd1286c3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசியல் களத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வந்த நடிகர் கமல், தற்போது தனது சினிமா கேரியர் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு பிரச்னை காரணமாக தடை பட்டு நிற்க, லோகேஷ் கனகராஜ்ஜூடன் விக்ரம் படத்தில் இணைந்தார் கமல். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. மே மாதம் விக்ரம் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இந்தப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்தப்படத்திற்கான கதைகளை கேட்டு வந்தார் கமல். முன்னதாக, நேர்காணல் ஒன்றில் மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார் கமல். இந்தப்படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிக்கிறது.
அடுத்ததாக கமலை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் பா.ரஞ்சித்தும், வெற்றிமாறனும் இருப்பதாக தெரிகிறது. ஆனால் பா. ரஞ்சித்துக்கு பாலிவுட்டில் பிர்சா முண்டா படம், விக்ரமுடன் இன்னொரு படம் என கமிட் ஆகியிருக்கிறார். வெற்றிமாறனுக்கு சூர்யாவின் வாடிவாசல் பட வேலைகள் இருக்கின்றன. இதனிடையே ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்ட கமல், ‘கொம்பன்’ ‘ மருது’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக முத்தையாவிற்கு 25 நாள்கள் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)