Kamal Gifts Shankar: பிரம்மாண்டமாக அசத்தக் காத்திருக்கும் இந்தியன் 2.. ஷங்கருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்
இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்த கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கரை வியந்து பாராட்டியுள்ளார்.
![Kamal Gifts Shankar: பிரம்மாண்டமாக அசத்தக் காத்திருக்கும் இந்தியன் 2.. ஷங்கருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த கமல் Kamal Haasan Impressed With Indian 2 Important Movie Sequences Presented Costly Panerai Watch to Director Shankar Kamal Gifts Shankar: பிரம்மாண்டமாக அசத்தக் காத்திருக்கும் இந்தியன் 2.. ஷங்கருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/28/f8ee005dff38af654d0b476c45d7a1631687952009888572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்த கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கரை வியந்து பாராட்டியுள்ளார்.
எகிறும் எதிர்பார்ப்பு
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் கலக்கிய முதல் பாகம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததுடன், வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கி பல சிக்கல்கள், இடையூறுகளைக் கடந்து தற்போது கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, தைவான் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.
அனிருத் - ஷங்கர் கூட்டணி
ஏற்கெனவே இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு சித்தார்த், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட 7 பேர் வில்லன்களாக நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் உடன் கைக்கோர்த்துள்ள நிலையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் விக்ரம் படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுடன் இரண்டாம் முறையாக அனிருத் கைக்கோர்த்துள்ளார்.முன்னதாக அனிருத், இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் கேரவேனில் அமர்ந்து உற்சாகமாக இசையமைக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.
ரிலீஸ் தேதி
இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கிஷோர் , ஜி.மாரிமுத்து எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு பொங்கல் ரிலீசாக இப்படம் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாள்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
புகழ்ந்து தள்ளிய கமல்
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை பார்த்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கரை பாராட்டி ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B
அதன்படி, ”இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக்கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி” என்றார் கமல்ஹாசன். மேலும், இயக்குநர் ஷங்கருக்கு வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)