
Bhairava Anthem: பிரபாஸின் கல்கி படத்தின் முதல் பாடல் வெளியீடு.. சந்தோஷ் நாராயணன் மேஜிக் செய்தாரா?
Bhairava Anthem: பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தின் முதல் பாடலான பைரவா ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசஞ் இந்தப் பாடலை பாடியுள்ளார்

கல்கி 2898 AD
வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கல்கி 2898 AD. பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இபப்டத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரம்மானந்தம், கமல்ஹாசன், திஷா பதானி, அனா பென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். புராணக் கதையை அடிப்படையாக வைத்து சுமார் 600 கோடி பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின்.
வரும் ஜூன் 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கல்கி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில் உள்ள வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளன. அதே நேரத்தில் கமலின் தோற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது கல்கி படத்தின் முதல் பாடலான பைரவா ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பைரவா ஆந்தம் (Bhairava Anthem)
கல்கி படத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்த நான்கு ஆண்டுகளில் அவர் ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். இதற்காக பல காரணங்கள் சமூக வளைதளத்தில் கூறப்பட்டாலும் கல்கி படத்தின் இசை மீது கவனம் செலுத்தவே தான் நிறைய படங்களுக்கு இசையமைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கல்கி படத்தின் முதல் பாடலான பைரவா ஆந்தம் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருந்த இந்தப் பாடல் ஒரு சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது படக்குழு இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகர் தில்கித் தோசஞ் இந்தப் பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் இவர் இம்தியாஸ் அலி இயக்கிய அமர் சிங் சம்கீலா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
⚠️ Warning… Listen at your own risk… Can’t get it out of your head 🎵#Prabhas x @diljitdosanjh ❤️🔥#BhairavaAnthem Full Video Song out now!
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 17, 2024
- https://t.co/HwZCpKLKcF#Kalki2898AD @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh… pic.twitter.com/1kJlIzeBVr
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

