Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?
அனிருத்தின் திறமையைப் பாராட்டி அவரது மாமனார் கலாநிதி மாறன் பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக உலா வருபவர் அனிருத். இவருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கு கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.
பேட்ட:
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பல்வேறு படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அனிருத் முதன்முதலில் இசையமைத்த திரைப்படம் பேட்ட. ரஜினிகாந்த் நடிப்பில் 2018ம் ஆண்டு இந்த படம் வெளியானது.
இந்த படத்தின் இசை வெளியீட்டின்போது கலாநிதி மாறன் அனிருத் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது,
பென்சில் மாதிரி:
Mamanar Marumagan vibes. Petta time la 😂🤭👌 #AnirudhRavichander #KavyaMaran #AnirudhKavyaWedding https://t.co/vcrRIkblen
— DarshXplorer. (@diligentdarshan) November 11, 2026
ஒரு ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் அனிருத்தான். பென்சில் மாதிரி இருந்துட்டு என்ன வாய்ஸ்-யா? ஏற்கனவே ஒரு ஆஸ்கார் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. நீங்க இன்னொரு ஆஸ்கார் கொண்டு வரனும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெற்றிகரமான இசையமைப்பாளர்:
அனிருத் முதன்முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய அந்த படத்தின் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதன்பிறகு, அனிருத் சன்பிக்சர்ஸ் குழுமத்திற்காக பீஸ்ட், திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன், கூலி, டிசி, ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
சன் குழுமத்தின் வெற்றிகரமான இசையமைப்பாளராக அனிருத் உலா வந்து கொண்டிருக்கிறார். அனிருத் - காவ்யா மாறன் திருமணம் தற்போது நடைபெற்றுள்ள நிலையில், கலாநிதி மாறன் அன்று அனிருத்தைப் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண வரவேற்பு:
கிரீஸ் நாட்டில் அவர்களது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், சென்னையில் அவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற அவர்களது திருமணத்தில் இரு வீட்டில் இருந்தும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். கலாநிதி மாறன் தரப்பில் இருந்து மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவர்களது மகன் உதயநிதி மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர். அனிருத் தரப்பில் அவரது பெற்றோர்கள் மட்டுமின்றி அனிருத்தின் மாமா-வான ரஜினிகாந்த், அவரது மனைவி லதா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்பட இந்தியாவின் பல மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பிரபல தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















