மேலும் அறிய

Kalaignar 100: கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்! ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

அரசியல் தாண்டி தமிழ் சினிமாவிலும் முக்கியப் பங்காற்றி உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவினை கோலாகமாகக் கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு. கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் ஆண்டு என்பதால், இந்த ஆண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுகவினர் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் நிலையில் தமிழ் திரையுலகினர் சார்பில் பிரமாண்ட விழா கொண்டாடப்பட உள்ளது. அரசியல் தாண்டி தமிழ் சினிமாவிலும் முக்கியப் பங்காற்றி உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின்  நூற்றாண்டு விழாவினை கோலாகமாகக் கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறும் என்றும், உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை, ஃபெஃப்சி தொழிலாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் என அனைவரும் இந்த விழாவில் பங்கு கொள்வர் என்றும், விழா குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பதாகவும் முன்னதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தெரிவித்திருந்தார். 

சென்னையில் அடுத்த மாதம் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று அழைத்தனர். இந்த விழாவில் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.


Kalaignar 100: கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்! ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

இதேபோல் நடிகர் கமல்ஹாசனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்று நேரில் அழைத்தனர். நடிகர் கமல்ஹாசனும் விழாவில் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.


Kalaignar 100: கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்! ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

மேலும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினிடம் முறையான அனுமதி பெற்ற பின் விழா குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Kamal Haasan: ப்ரேமம் இயக்குநருக்கு குரலால் தெம்பூட்டிய கமல்ஹாசன்.. அன்புக்கு தூது சென்ற நடிகர் பார்த்திபன்!

Sandy Master: வேற லெவல்! திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி.. அசரவைக்கும் 'ரோசி' பட ஃபர்ஸ்ட் லுக்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: கடைசி 2 ஓவர்; 200 ரன்களை தாண்டுமா பெங்களூரு?
RCB vs DC LIVE Score: கடைசி 2 ஓவர்; 200 ரன்களை தாண்டுமா பெங்களூரு?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: கடைசி 2 ஓவர்; 200 ரன்களை தாண்டுமா பெங்களூரு?
RCB vs DC LIVE Score: கடைசி 2 ஓவர்; 200 ரன்களை தாண்டுமா பெங்களூரு?
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget