மேலும் அறிய

Kaaka Gopal About Vijay : கொடுப்பதே தெரியாமல் விஜய் செய்யும் உதவிகள்: நடிகர் காக்கா கோபால் உருக்கம்

பொதுவாகவே தர்மம் என வந்துவிட்டால் வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியக்கூடாது என பெரியோர்கள் சொல்வார்கள். அதைத் தான் நடிகர் விஜய்யும் பின்பற்றுகிறார் என நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் நடிகர் காக்கா கோபால்.

தமிழ் சினிமா உலகில் காக்கா கோபாலை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகர் ஜீவா நடித்த ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்கின் நண்பராக கோபால் படத்தில் பின் இவர் மாதவனின் ரன் படத்திலும் காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்ற காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ரமேஷ்கண்ணாதான். இதனை தொடர்ந்து இவர் சில பல படங்களில் தான் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் காக்கா கோபால் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில் நடிகர் விஜய் குறித்து யாரும் அறியாத பல செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்க்காதோர் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அந்தப் படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனபின்னரும் கூட இன்றும் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் யாரும் பார்க்காமல் இருப்பதில்லை. அப்படிப்பட்ட படத்தில் நடித்தவர் பாரி வெங்கட். இன்று சென்னை ராயப்பேட்டை மணிக் கூண்டைப் பார்த்தால் பாரி வெங்கட் நினைவில் வந்து செல்வார். வெளியூரில் இருந்து புதிதாக சென்னை வரும் நபருக்கு பாரி வெங்கட் ராயப்பேட்டை மணிக்கூண்டு  செல்ல வழி சொல்வார். அந்த காமெடி இன்றளவு ரொம்பவும் பிரபலம்.

அந்த காமெடியில்’ மணிக்கூண்டுக்கு எப்படி போனும் என கேட்பவரிடம்’ டவுசர் பாண்டி’ அட்ரஸ் கேட்ட நபரை நடுரோட்டில் அமரவைத்து மேப் வரைந்து’ போக வேண்டிய இடத்தை சொல்லி, கடைசியில நீ கேட்ட மணிக்கூண்டு இங்கேத்தான் இருக்குனு  சொல்வார். அதற்கு ஃபீஸ் வேறு வாங்கிக் கொள்வார். இந்த காமெடி அப்போது செம ஹிட். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் பிடித்த காமெடி இது. உண்மையில் சொல்லப்போனால் வாழ்க்கையில் நாமும் இப்படித்தான் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு எங்கெங்கோ எதை எதையோ தேடி அலைவோம். 

Kaaka Gopal About Vijay : கொடுப்பதே தெரியாமல் விஜய் செய்யும் உதவிகள்: நடிகர் காக்கா கோபால் உருக்கம்

அந்தக் காமெடியில் டவுசர் பாண்டி கேரெக்டரில் நடித்தவர் தான், காமெடி நடிகர் பாரி வெங்கட். பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

இவர் ’திருநெல்வேலி’ படத்தில் நடித்து’ ஷூட்டிங் முடிந்து திரும்பினார். ஆனால், ஸ்பாட்டில் இருந்து புறப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அவர் வீட்டுக்கு போகவில்லை. குடும்த்தினர கதற சக காமெடியன்கள்’  அவரை தேடினர். அப்போதுதான் ஷூட்டிங் முடிந்து திரும்பும் போது பெரம்பலூர் அருகில் நடந்த விபத்தில் பாரி வெங்கட் இறந்ததே தெரியவந்தது.

சக காமெடி நடிகர்கள் சேர்ந்து அவருடைய உடலை மீட்டு சென்னையில் முறைப்படி சடங்குகள் செய்து இறுதி மரியாதை செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாரி வெங்கட் இறந்த செய்தி விஜய்க்கு தெரியவர, உடனே’ விஜயும், அவரது தந்தை இயக்குநர் சந்திரசேகரும் சென்னை தி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாரி மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துட்டு, அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றனர் என்ற தகவலை காக்கா கோபால் தெரிவித்தார்.

ஏற்கெனவே தாடி பாலாஜியும் தனக்கு விஜய் உதவியதைப் பற்றிக் கூறியிருந்தது இங்கு நினைவுகூறத்தக்கது.   தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதபோது, விஜய் தெரிந்து கொண்டு’ மருத்துவமனைக்கு வந்து ஒரு  லட்ச ரூபாய் கொடுத்துச் சென்றதை தாடி பாலாஜி, விஜய் டிவி ஷோவில் கூறியிருந்தார்.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
தசரா நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா ராமிடம் அத்துமீறிய நபர்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget