மேலும் அறிய

இப்போ தெளிவா யோசிக்க முடியுது...செம ஹெப்பியாக பேசிய ஜெயம் ரவி

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தான் இந்த ஆண்டும் நிச்சயமாக எழுந்து வருவேன் என்று நடிகர் ஜெயம் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

காதலிக்க நேரமில்லை

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. ரெட் ஜயண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி நடித்து முன்னதாக வெளியான பிரதர் , இறைவன் , சைரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின , இது தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி நிறைய சவால்களை எதிர்கொண்டு வந்தார். காதலிக்க நேரமில்லை படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஜெயம் ரவி இதுகுறித்து பேசினார்.

இந்த ஆண்டு எழுந்து வருவேன்

" 2014 ஆம் ஆண்டு எனக்கு கொஞ்சம் தோல்வியான ஆண்டாக அமைந்தது. 3 வருடமாக ஒரே படத்தில் நடித்தேன். அதனால் என்னால் எந்த ஒரு பேட்டியும் கொடுக்க முடியவில்லை. என்னுடைய லுக் வெளியே தெரிந்துவிடும் என்கிற மாயையில் என்னை வைத்திருந்தார்கள். அந்த படமும் சரியாக போகவில்லை. அதனால் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நான் ஏதாவது தப்பா நடித்திருக்கிறேனா. நான் தவறான கதையை தேர்ந்தெடுத்தேனா என்று யோசித்து பார்த்தேன். என்மேல் எந்த தப்பும் இல்லை. அப்புறம் நான் எதற்கும் துவண்டு போகனும் . வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் நான் ஒரே மாதிரி இருக்க கற்றுக் கொண்டேன்.  அடுத்த ஆண்டே தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , பூலோகம் என அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை கொடுத்தேன். கீழே விழுந்த ஒரு மனிதனை அவர் தோற்றுவித்தாக நாம் சொல்கிறோம். ஆனால் அவர் தோற்றுப்போனவர் இல்லை. கீழே விழுந்தும் எழுந்திருக்காமல் இருப்பவர் தான் தோற்றுப்போனவர்.

அதனால் இந்த ஆண்டு நான் நிச்சயம் எழுந்து வருவேன். அதற்கேற்ற மாதிரியான கதைகளில் தற்போது நான் நடித்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை , சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இந்த மாதிரி நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கு. இப்போது என்னால் ரொம்ப தெளிவாக சிந்திக்க முடிகிறது. சந்தோஷமாக இருக்கேன்." என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget