Wednesday Series: நெட்ப்ளிக்ஸ் தளத்தில் புது வரலாறு படைத்த வெட்னஸ்டே சீரிஸ்...! ரசிகர்கள் மகிழ்ச்சி...
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் முதல் ஒளிபரப்பானது வெட்னஸ்டே சீரிஸ் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கில சீரிஸ் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஆல்ஃப்ரெட் கோப் மற்றும் மைல்ஸ் மில்லர் தயாரிப்பில் ஜென்னா ஓர்டேகாவின் நடிப்பில் வெளிவந்த டெலிவிஷன் சீரிஸ் வெட்னஸ்டே. இந்த சீரிஸ் பக்கா ஹாரர் காமெடி சீரிஸாக வெளியானது. வெட்னஸ்டே சீரிஸின் முதல் சீசன் 8 எபிசோட்களை கொண்டது. டிம் பர்டன் முதல் நான்கு எபிசோடுகளை இயக்கியுள்ளார். ஆடம்ஸ் பேமிலி என்ற ஒரு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த சீரிஸ். அதில் கதாநாயகியாக வெட்னஸ்டே ஆடம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜென்னா ஓர்டேகா நடித்துள்ளார். வெட்னஸ்டே சீரிஸின் முதல் சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் முதல் ஒளிபரப்பானது.
இந்த வெட்னஸ்டே சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கில சீரிஸ் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளது. ஒளிபரப்பான முதல் வாரத்தில் 341 மில்லியன் மணி நேரத்திற்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஒப்பிடும்போது, ஒளிபரப்பான 28 நாட்களுக்குள் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மணி நேரம் பார்க்கப்பட்ட இரண்டாவது ஆங்கில சீரிஸ் என்ற சாதனையை படைத்துள்ளது.
வெட்னஸ்டே சீரிஸின் அடுத்த சீசன் விரைவில் உருவாக உள்ளதாகவும் தரவுகள் வெளியானது.
View this post on Instagram
ஜென்னா ஓர்டேகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள முதல் சீசன் 'நெவர்மோர் அகாடமியில் வெட்னஸ்டே இருந்த ஆண்டுகள்' என்ற டேக் லைனில் வெளியானது. முதல் சீசனில் ஜென்னா ஓர்டேகாவுடன் க்வென்டோலின் கிறிஸ்டி, ஜேமி மெக்ஷேன், பெர்சி ஹைன்ஸ் வைட், ஹண்டர் டூஹன், எம்மா மியர்ஸ், ஜாய் சண்டே, நவோமி ஜே. ஓகாவா, மூசா மோஸ்டாஃபா, ஜார்ஜி ஃபார்மர், ரிக்கி லிண்ட்ஹோம் மற்றும் கிறிஸ்டினா ரிச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பான சீசன்:
இந்த முதல் சீசனில் கதாநாயகி வெட்னஸ்டே அவளது வித்தியாசமான மனநலத்திறனை வளர்த்துக் கொள்ள நினைக்கிறாள்; தனது நகரத்தில் நடக்கவிருந்த ஒரு பயங்கரமான கொலை சம்பவத்தை தடுக்கிறாள்; மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய பெற்றோரை சிக்க வைத்த ஒரு சம்பவம் குறித்த மர்மத்தை தீர்க்கிறாள்.
தயாரிப்பாளர்கள் அல்ஃப்ரெட் கோப் மற்றும் மைல்ஸ் மில்லர் இந்த சீரிஸ் குறித்து பேசுகையில், உலகில் உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்த ஒரு அற்புதமான சீரிஸ் வெட்னஸ்டே" என்று கூறுகின்றனர். மேலும் வெட்னஸ்டே சீரிஸின் அடுத்த சீசனை விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.