மேலும் அறிய

Jayaram with Mahesh Babu: மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கும் ஆழ்வார்க்கடியான்... தெலுங்கு ரசிகர்களுக்கு ஜாலி அப்டேட் தந்த ஜெயராம்!

அத்தாடு, கலேஜா படங்களை தொடர்ந்து திரிவிக்ரம் - மகேஷ் பாபு கூட்டணி சேரும் SSMB 28 திரைப்படத்தில் இணைக்கிறார் பொன்னியின் செல்வன் நம்பி நடிகர் ஜெயராம்.

தெலுங்கு திரையுலகில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட நடிகர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் போல தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு. அதுமட்டுமின்றி தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்ற போக்கிரி, கில்லி போன்ற திரைப்படங்கள் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படங்களின் ரீ மேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Jayaram with Mahesh Babu: மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கும் ஆழ்வார்க்கடியான்... தெலுங்கு ரசிகர்களுக்கு ஜாலி அப்டேட் தந்த ஜெயராம்!

மூன்றாவது முறையாக கூட்டணி:

மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான மகேஷ் பாபுவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏராளமான வெற்றி படங்களில் நடித்த மகேஷ் பாபு அடுத்தாக கூட்டணி சேரப்போவது மேஜிக்கல் இயக்குநராக கொண்டாடப்படும் திரிவிக்ரம் இயக்கும் திரைப்படத்தில். அத்தாடு, கலேஜா படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி சேரும் இப்படத்திற்கு தற்காலிகமா SSMB 28 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஜெயராம் இன்ஸ்டா போஸ்ட் :

அத்தாடு, கலேஜா இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதால் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் மலையாளத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராகக் கருதப்படும் நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார். இதை ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் உறுதி செய்துள்ளார்.

Jayaram with Mahesh Babu: மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கும் ஆழ்வார்க்கடியான்... தெலுங்கு ரசிகர்களுக்கு ஜாலி அப்டேட் தந்த ஜெயராம்!

ஜெயராம், மகேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து " கிருஷ்ணா சாரின் படங்களை தியேட்டரில் பார்த்து வளர்ந்தவன்! இப்போது இந்த முத்தான நபருடன் இணைவதில் மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை என்னுடைய அபிமான இயக்குனர் திரிவிக்ரமுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி " எனப் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

விரைவில் டைட்டில் ரிலீஸ் :

இந்நிலையில், திரிவிக்ரம் நடிகர் மகேஷ் பாபுவை இந்தப் படத்தில் எப்படி காண்பிக்க  உள்ளார் என்பதைக் காண மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும் இப்படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆக்‌ஷன் கலந்த ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் சப்ஜெக்ட் படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீலீலா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.  

தலைப்பு செய்திகள்

 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget