மேலும் அறிய

அமரன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட பிரதர் ஜெயம் ரவி! கம்பேக் தருவாரா?

தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியில் ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர் படங்கள் தோல்வியைத் தழுவியது.

தமிழ் திரையுலகில் இந்த தீபாவளி கொண்டாட்டமாக ஜெயம் ரவியின் பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாகியது. சிவகார்த்திகேயன் மற்றும் கவினுடன் ஒப்பிடும்போது ஜெயம் ரவி அனுபவம் மற்றும் திறமைவாய்ந்த நடிகர் ஆவார்.

சிவகார்த்திகேயனின் தீபாவளி:

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் தோல்வி படங்களை ஜெயம்ரவி அளித்து வந்த சூழலில், நடப்பு தீபாவளிக்கு வெளியான படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது சிவகார்த்திகேயனின் அமரன் படமே ஆகும். அதற்கு காரணம் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தது ஆகும். மேலும், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாறு என்பதாலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

அதேபோல, அமரன் படத்திற்கு நிகரான பெரிய வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது கவினின் ப்ளடி பெக்கர் படம் ஆகும். வளர்ந்து வரும் நட்சத்திரமாக கருதப்பட்ட கவினின் டாடா படம் வெற்றி பெற்றதையடுத்து, அவரின் படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

அமரனின் அலையில் மூழ்கிய பிரதர், ப்ளடி பெக்கர்:

இந்த படங்களின் எதிர்பார்ப்புகளுடன் ஜெயம்ரவியின் பிரதமர் படமும் வெளியாகியது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் மூலமாக மிகப்பெரிய காமெடிப் பட இயக்குனர் என்ற பெயர் பெற்ற ராஜேஷ் அடுத்தடுத்த தோல்வி படங்களுக்கு பிறகு இயக்கிய படமாக பிரதர் வெளியானது.

ஆனால், அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி ஜோடியின் நடிப்பு, ராஜ்குமார் பெரியசாமியின் வலுவான திரைக்கதை மற்றும் இயக்கம், மேஜர் முகுந்தனின் உண்மையான வாழ்க்கை வரலாறு ஆகியவை காரணமாக அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர் தோல்வியில் ஜெயம் ரவி:

மேலும், காமெடி ட்ராக்கில் உருவாகிய பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் ஆகிய இரு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது. அமரன் படத்துடன் ஒப்பிடும்போது இந்த இரு படங்களும் குறைவான அளவே திரையிடப்பட்டது. மேலும், படமும் ரசிகர்களின் கவனத்தை பெறத் தவறியதால் இந்த படங்கள் திரையிட்ட தியேட்டர்களில் அமரன் திரையிடத் தொடங்கியுள்ளனர்.

பிரதர் படம் எதிர்பாராத வெற்றியைப் பெறாதது மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஜெயம் ரவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயம் ரவிக்கு கடந்த 2019ம் ஆண்டு வெளியான கோமாளி படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றிகள் எதுவுமே அமையவில்லை. விக்ரம், கார்த்தி ஆகியோருடன் இணைந்து ஜெயம் ரவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

கம்பேக் தருவாரா ஜெயம் ரவி?

கடைசியாக வந்த அகிலன், இறைவன், சைரன் படங்கள் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த நிலையில், பிரதர் படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், அவரது கைவசம் ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்கள் உள்ளது.

அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றி அலையில் கவினின் ப்ளடி பெக்கர் படத்தை காட்டிலும் ஜெயம் ரவியின் பிரதர் படமே அதிகளவில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர் தோல்விகளால் துவண்டு வரும் ஜெயம் ரவிக்கு பிறக்கப்போகும் 2025ம் ஆண்டு வெற்றியாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
CM Stalin Slams BJP: “புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
“புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
CM Stalin Slams BJP: “புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
“புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
Tata Sierra vs Hyundai Creta: புதிய டாடா சியராவா.? ஹூண்டாய் க்ரெட்டாவா.? வாங்குவதற்கு எது சிறந்தது? வாங்க பார்க்கலாம்
புதிய டாடா சியராவா.? ஹூண்டாய் க்ரெட்டாவா.? வாங்குவதற்கு எது சிறந்தது? வாங்க பார்க்கலாம்
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Embed widget