மேலும் அறிய

Jawan Collection Record : தெறிக்கவிடலாமா! தினசரி ரெக்கார்ட் பிரேக்கிங் செய்யும் 'ஜவான்'... 1100 கோடி வசூலித்து சாதனை..

Jawan Box office collection : இந்திய திரைப்பட வரலாற்றிலேயே ஒரு பாலிவுட் திரைப்படம் சர்வதேச அளவில் 1100 கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது 'ஜவான்'.  

அட்லீ இயக்கத்தில் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் கடந்த செப்டம்பர் 7ம்  தேதி வெளியான திரைப்படம் 'ஜவான்'. உலகெங்கிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

Jawan Collection Record : தெறிக்கவிடலாமா! தினசரி ரெக்கார்ட் பிரேக்கிங் செய்யும் 'ஜவான்'... 1100 கோடி வசூலித்து சாதனை..

தரவரிசையில் சாதனை :

படம் வெளியான நாள் முதலே இன்று வரை தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்து வருகிறது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் தரவரிசையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே  ரூ.619.2  கோடியை வசூலித்துள்ளது. இந்தியில் மட்டும் 560.03 கோடியும் மற்ற மொழிகளில் 59.89 கோடியும் வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் வரவேற்பு :

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே ஒரு பாலிவுட் திரைப்படம் சர்வதேச அளவில் 1100 கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது 'ஜவான்'.  

தமிழில் நான்கு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக திகைத்து வந்த அட்லீ நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். முதல் படமே சர்வதேச அளவில் வரவேற்பை பெற்ற ஒரு படமாக கொடுத்து உச்சிக்கு சென்று விட்டார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் பாலிவுட்டில் இதுவே முதல் படமாகும்.

இந்தி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்  :

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் அரசியல் கருத்துகளின் கலவையோடு வெளியான இப்படம் பாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு புதிய கான்செப்ட் என்பதால் இந்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது.

Jawan Collection Record : தெறிக்கவிடலாமா! தினசரி ரெக்கார்ட் பிரேக்கிங் செய்யும் 'ஜவான்'... 1100 கோடி வசூலித்து சாதனை..
ரெக்கார்ட் பிரேக்கிங்:

ஜவான் திரைப்படம் வெளியான 29 நாட்களில் 1100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் இயக்குனர் அட்லீ. ஒவ்வொரு நாளும் ரெக்கார்ட் பிரேக்கிங் செய்யும் ஜவான் மேலும் வசூலை எகிறவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏராளமான மாஸ் சீக்வென்ஸ் படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது. பதான், ஜவான் திரைப்படம் மூலம் மாஸான ரீ என்ட்ரி கொடுத்துள்ள ஷாருக்கான் நடிப்பில் ஆண்டு இறுதியில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்து விட்டால் ஷாருக்கானுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமையும். பாலிவுட் பாட்ஷா ரசிகர்கள் ஜவான் படத்தின் இமாலய வெற்றியை சோசியல் மீடியா எங்கும் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget