Jawan Box Office Collection: வசூல் வேட்டையில் ‘ஜவான்’.; பாக்ஸ் ஆபிஸ் சாதனை குறித்து அப்டேட் கொடுத்த அட்லீ!
Jawan Box Office Collection: ஜவான் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
ஜவான் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூல் செய்துள்ளதாக இயக்குநர் அட்லீ இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி வெளியான இந்தப் படம் பல விமர்சனங்களை கடந்தும் வெற்றிகரமாக வசூல் சாதனை புரிந்து வருகிறது. உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.நடிகை நயன்தாராவும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 574 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இயக்குநர் அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜவான் வசூல்
இந்தப் படம் ரிலீசுக்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ட்ரெய்லர், ‘ராமையா; பாடல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்தது.
வெளியான முதல் நாள் முதல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் ரூ.129 கோடி வசூலித்தது. தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ஜவான், பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மூன்று நாட்களில் மொத்தமாக 384.69 கோடி பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.