மேலும் அறிய

மத உணர்வுகளை புண்படுத்தியதா ஜனநாயகன் ? கடவுள் பற்றி எச் வினோத் சொன்னதை பாருங்க

JanaNayagan : தனது கடைசி படத்தை இயக்க விஜய் எச் வினோத்திற்கு வாய்ப்பளித்த முக்கிய காரணங்களில் ஒன்று சமூக அரசியல் சூழல் மீது இயக்குநர் எச் வினோத்திற்கு இருக்கும் தெளிவான பார்வையே

விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸுக்கு முன்பாக சென்சார் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதாக படத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம். நிலைமை இப்படி இருக்க மதம் மற்றும் கடவுள் பற்றி ஜனநாயகன் பட இயக்குநர் எச் வினோத் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஜனநாயகன் ரிலீஸில் தாமதம் ?

விஜயின் திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்தை எச் வினோத் தயாரித்துள்ளார். எச் வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ ,பாபி தியோல் மற்றும் பல்வேறு நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன் வெளியாகும் படம் என்பதால் இப்படம் பல தரப்புகளிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி படக்குழுவுக்கு பரிந்துரைத்தது. தணிக்கை குழுவின் பரிந்துரைப்படி திருத்தங்கள் செய்தும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து மறுதணிக்கைக்கு அனுப்பியது தணிக்கை குழு. இதனால் படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அவசர வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று பிற்பகல் 2:30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. 

கடவுள் பற்றி எச் வினோத்

மத ரீதியான உணர்ச்சிகளை புண்படுத்துவதாக படத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு ஒரு திட்டமிட்ட சதி என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் படத்தின் இயக்குநர் எச் வினோத் கடவுள் குறித்தும் மதம் பற்றியும் பேசியுள்ள வீடியோ ஒன்றையும் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோவில் " கடவுள் இருக்கா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் போகவில்லை. எனக்கு கடவுள் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் எனக்கு கடவுள் வேண்டும். கடவுள் இல்லாமல் வாழ்வதற்கு ஒரு பெரிய தைரியமும் தெளிவும் வேண்டும். அந்த தெளிவும் தைரியமும் எனக்கு இல்லை. என்னுடைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர எனக்கு கடவுள் தேவையாக இருக்கிறார். நான் கடவுளை கும்பிடுவதன் வழியாக வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. கடவுளை வைத்து வியாபாரம் பண்ணும் போது கடவுளை வைத்து அதிகாரத்திற்கு செல்ல நினைக்கையில் தான் கடவுள் பிரச்சனையாக மாறுகிறார். என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது கணக்கு பாடத்தில் வரும் ஒரு எக்ஸ் போல்தான். ஒரு கணக்கிற்கான விடையை கண்டுபிடிக்க எக்ஸ் என்கிற ஒரு காரணியை பயண்படுத்துவோம் இல்லையா. அந்த மாதிரிதான் எனக்கு கடவுள்" என கூறியுள்ளார். இவ்வளவு தெளிவாக பேசும் ஒருவர்  எப்படி மத உணர்வுகளை புண்படுத்தும் மாதிரி படமெடுக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் .

 

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget