மேலும் அறிய

JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?

JanaNayagan Box Office Prediction : ஜனநாயகன் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் எத்தனை கோடி வசூல் செய்யும் என்பதை மாநில வாரியாக பார்க்கலாம்

முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் வரும் ஜூலை 23 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காலதாமதம் , சட்டவிரோதமாக படம் இணையத்தில் கசிந்தது. படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது என பல்வேறு காரணங்கள் இப்படத்தின் வசூலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி தற்போது வெளியாகியுள்ள முன்பதிவு தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை காட்டுகின்றன.

இணையத்தில் ஒரு கோடி பேர் பார்த்த ஜனநாயகன்

ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. அந்த கசிந்த பதிப்பை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது வரை அந்த வீடியோ முழுமையாக இணையத்தில் இருந்து நீக்கப்படவில்லை.

A சான்றிதழால் வசூல் பாதிக்குமா?

'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படத்தை திரையரங்குகளில் பார்க்க அனுமதி கிடையாது. பொதுவாக குடும்ப ரசிகர்கள் அதிகம் கொண்ட விஜய் படங்களுக்கு இது ஒரு பின்னடைவாக அமையலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள முன்பதிவு நிலவரத்தை பார்க்கும்போது, அந்த பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவில் தெரியவில்லை என கூறப்படுகிறது.

சென்னையில் சில நிமிடங்களில் ஹவுஸ்ஃபுல்

தமிழகத்தில் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கான முன்பதிவு ஜூலை 19 அன்று தொடங்கியது. குறிப்பாக சென்னையில் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன,

புக் மை ஷோ தளத்தில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 8 ஆயிரம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெளியீட்டு நாளை நெருங்கும் நிலையில் முன்பதிவு மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ரூ.10 கோடி... வெளிநாடுகளில் ரூ.11 கோடி

முன்பதிவு தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் வெளிநாடுகளில் மட்டும் இதுவரை ரூ.11 கோடி வரை முன்பதிவு வசூல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளியீட்டுக்கு முன்பே 'ஜன நாயகன்' பல சாதனைகளை படைக்கும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

முதல் நாள் வசூல் எவ்வளவு?

தற்போதைய முன்பதிவு வேகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள தோராயமான கணிப்பின்படி, 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் ரூ.130 கோடி வரை செல்லக்கூடும் என கூறப்படுகிறது

முதல் நாள் வசூல் கணிப்பு:

  • தமிழ்நாடுரூ32 முதல் ரூ35 கோடி
  • ஆந்திரா / தெலங்கானாரூ7 முதல் ரூ8 கோடி
  • கர்நாடகாரூ12 கோடி
  • கேரளாரூ10 கோடி
  • வட இந்தியாரூ3 முதல் 5 கோடி
  • வெளிநாடுகள்ரூ50 கோடி
  • உலகளாவிய மொத்த வசூல்சுமார் ரூ130 கோடி

சர்ச்சைகளை தாண்டி சாதனை படைக்குமா 'ஜன நாயகன்'?

படம் இணையத்தில் கசிந்தது, A சான்றிதழ் வழங்கப்பட்டது போன்ற காரணங்களால் வசூலில் தாக்கம் இருக்கும் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், தற்போதைய முன்பதிவு நிலவரம் வேறொரு படத்தை காட்டுகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை என்பதையே டிக்கெட் விற்பனை வெளிப்படுத்துகிறது.

பின்குறிப்பு : வசூல் குறித்த தகவல்கள் தோராயமான கணிப்புகளே அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல.

Advertisement

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget