James Cameron : அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு கொரோனா; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கோவிட்-19 பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கவிருக்கும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் பிரீமியரில் கலந்து கொள்ளவில்லை
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் “அவதார்” படத்தின் முதல் பாகம் வெளியானது. உலகளவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த அப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட படி அவதார் திரைப்படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகும் என கூறப்பட்டது. அந்த வகையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் கோவிட் - 19 பாசிட்டிவ் :
இந்த நிலையில் அவதார் படம் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் கோவிட்-19 பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதனால் அவரால் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கவிருக்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் பிரமாண்டமான பிரீமியரில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று அவதார்: தி வே ஆஃப் வாட்டர் லண்டன் பிரீமியர் நிகழ்ச்சியில் கேமரூன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
James Cameron will not attend tonight’s premiere for ‘AVATAR: THE WAY OF WATER’ after testing positive for the Pandora Clap.
— DisbussingFilm (@DisbussingFilm) December 12, 2022
(Source: Vulture) pic.twitter.com/qJtgsxABF7
பிரீமியரில் சந்திக்க முடியாது :
இது குறித்து ஜேம்ஸ் கேமரூன் பேசுகையில் " நான் டோக்கியோவில் இருந்து திரும்பி வந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறேன். விமானத்தில் கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் எனக்கு கோவிட் - 19 பாசிட்டிவ் இருந்ததால் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். இன்றிரவு எனது சொந்த பிரீமியருக்குச் செல்ல முடியாது என்பது மனவருத்தத்தை கொடுக்கிறது. நான் பல ஆண்டுகளாக உங்களை பிரீமியரில் சந்திக்கிறேன் என கூறியிருந்தேன். ஆனால் நான் இது நடக்கும் என யூகிக்கவில்லை. கடவுள் நினைக்கிறான் மனிதன் செயல்படுத்துகிறான்" என பேசியிருந்தார்.
This Friday, experience the motion picture event of a generation. #AvatarTheWayOfWater only in theaters December 16. Get tickets now: https://t.co/9NiFEIpZTE pic.twitter.com/2LqhpCZizH
— Avatar (@officialavatar) December 12, 2022
உலகம் முழுவதும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16ம் வெளியாகவுள்ளது. மனதை கவரும் இப்படத்தின் ரிலீஸுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.