மேலும் அறிய

Jailer Second Single: 'தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை’ : தெறிக்கவிடும் ஜெயிலர் பாடல்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவுப் பெற்றது. தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக  செப்டம்பர் மாதம்   படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கும், ரஜினியின் பிறந்தநாளன்று டிசம்பர் 12 ஆம் தேதி, படத்தில் இடம்பெற்றுள்ள அவரின் கேரக்டரான ‘முத்துவேல் பாண்டியன்’ தோற்றமும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

இதனிடையே ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. அதில் முதல் அப்டேட்டாக கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது. பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். தமிழ், தெலுங்கு கலந்து எழுதப்பட்ட இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இன்றளவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இப்படியான நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்’  இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த பாடலின் முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் ரஜினியின் பன்ச் வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களை பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வைத்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் ‘ஃபயர்’ விடும் அளவுக்கு ரஜினிக்கு மிகப்பெரிய இமேஜை கொடுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த பாட்டை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
பியானோ வாசித்ததால் 15 நாள் சஸ்பெண்ட்...தேவாவின் ஆரம்பாகால இசை வாழ்க்கை எப்படி இருந்தது
பியானோ வாசித்ததால் 15 நாள் சஸ்பெண்ட்...தேவாவின் ஆரம்பாகால இசை வாழ்க்கை எப்படி இருந்தது
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
Embed widget