மேலும் அறிய

"இந்த தம்பிய மன்னிச்சுடுங்கண்ணா " - ரோஹித் ஷெட்டியை மறைமுகமாக சாடினாரா அல்போன்ஸ் புத்திரன்?

"தமிழர்களை காயப்படுத்துவது அவரது நோக்கமாக இருந்திருக்காது. ஏனெனில் அவர் இயக்குநர் ஷங்கர் படங்களின்  மூலம் ஈர்க்கப்பட்டு நிறைய காட்சிகளை எடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்"

'பிரேமம் 'திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் பலரை ஈர்த்தவர் நடிகர் அல்போன்ஸ் புத்திரன். இவர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் , ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ' சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்பம் வெளியான சமயத்தில் அதில் தமிழ்மொழி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என  சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில் "சென்னை எக்ஸ்பிரஸ் தமிழ் மொழி மக்களை காயப்படுத்துவது போல உள்ளது. ஹிந்தி படங்களை எடுப்பதால் அங்குள்ள மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு படங்களை எடுக்க கூடாது. ஒரு படம் ஒட்டுமொத்த மக்களுக்கானதாக இருக்க வேண்டும். எல்லா மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். எனது பிரேமம் படத்தில் இரண்டு மொழிகளுக்கான மதிப்பையும் நான் கொடுத்திருப்பேன்.இனிமேலாவது இது போன்று படங்களை எடுக்காதீர்கள் அண்ணா"என குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித் ஷெட்டிக்கும் அல்போன்ஸ் புத்திரனுக்கும் இடையில் அப்போது கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் அப்போது நான்  பேசியது தவறு என அல்போன்ஸ் புத்திரன் பேஸ்புக் வாயிலாக ரோகித் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்பது போன்ற பதிவு ஒன்றினை ஷேர் செய்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன்  வெளியிட்டுள்ள பதிவில் " சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழை வெளிப்படுத்தியது குறித்து ரோகித் ஷெட்டியிடம் எனக்கு பிரச்சனை இருந்தது. தமிழர்களை காயப்படுத்துவது அவரது நோக்கமாக இருந்திருக்காது. ஏனெனில் அவர் இயக்குநர் ஷங்கர்  சார் படங்களின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள்  மூலம் ஈர்க்கப்பட்டு நிறைய காட்சிகளை எடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன். நான் முன்பு தெரிவித்த கருத்துகளுக்கு வருந்துகிறேன். நீங்கள் எடுத்த சிங்கம் 2  படத்தில்  ஹீரோ அரசியல் கட்சிகளிடம் பணம் பெறுவது போன்ற ஒரு காட்சியில் நாயகனின் அம்மா கோபப்படும் காட்சியை பார்த்து நான் அழுதுவிட்டேன். நாயகன் தன் தாயிடம் தோற்றுப் போகும் அந்த காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதுவரையில் நான் பார்த்த படங்களில் இப்படியான காட்சிகளை நான் பார்த்ததே இல்லை.  இது போன்ற காட்சியை படமாக்கிய உங்களுக்கு என் மரியாதையை உரித்தாக்கிக்கொள்கிறேன். உங்களின் 'கோல்மால்' சீரிஸ், 'சிங்கம்' சிரீஸ், 'சிம்பா' போன்ற பல படங்களை நான் ரசித்துள்ளேன் . உங்களின் அடுத்த படைப்பான 'சூரியவன்ஷி'க்கும் கூட நான் காத்திருக்கிறேன். இந்த தம்பியை மன்னிச்சிடுங்க "
என குறிப்பிட்டுள்ளார்.

என்னதான் மன்னிப்பு கேட்பது போல பதிவிட்டிருந்தாலும் இது ரோஹித் ஷெட்டியை மறைமுகமாக சாடுவது போல் உள்ளது என நெட்டிசன்கள் கிசு கிசுத்து வருகின்றனர். அல்போன்ஸ் புத்திரன் தற்போது  பாட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி நடிகர்களான பகத் பாசில் மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget