மேலும் அறிய

Indian 2 Intro Video: விவேக் முதல் நெடுமுடி வேணு வரை.. இந்தியன் 2 அறிமுக வீடியோவில் கவனம் ஈர்த்த மறைந்த நடிகர்கள்!

தமிழில் ரஜினியும், தெலுங்கில் ராஜமவுலியும், கன்னடத்தில் சுதீப்பும், இந்தியில் அமீர்கானும், மலையாளத்தில் மோகனும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். 

Indian2 Glimpse: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவில் இறந்த விவேக், மனோலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்ற காட்சிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. 

1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியன் 2 பாகம் எப்போது எடுக்கப்படும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் விக்ரம் படத்தை முடித்த கமல்ஹாசன் விறுவிறுப்பாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். 

இந்தியன் 2 படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், அதன் அறிமுக வீடியோ வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியானது. தமிழில் ரஜினியும், தெலுங்கில் ராஜமவுலியும், கன்னடத்தில் சுதீப்பும், இந்தியில் அமீர்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். 

இந்தியனுக்கு சாவே கிடையாது என்ற வசனத்துடன் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவில் மறைந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். பாபி சிம்ஹாவுடன் பாதுகாப்பு படை உடையில் விவேக்கும் மனோபாலாவும் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளாகவும் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமில்லாமல் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சித்தார்த், எதிர்மறை ரோலில் சமுத்திரக்கனி, பிரியா பவானி ஷங்கர் என ஒவ்வொருவரின் கேரக்டர்களும் படத்தின் அறிமுக வீடியோவில் கவனத்தை ஈர்த்துள்ளன. இறுதியாக ஆடம்பரமாக வரும் எஸ்.ஜே. சூர்யாவும் கவனத்தை ஈர்த்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசை அளித்துள்ளார். இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகலாம் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க:  Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? விஜயின் ஜோதிட கட்டங்கள் சொல்வது என்ன?

Indian 2 An Intro: கலாய்க்கப்பட்ட கொரோனா நிகழ்வுகள்.. ஊழல் வில்லன்களை சுளுக்கு.. இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ எப்படி?

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget