மேலும் அறிய

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

பொதுவாக அஜித் குடும்பம் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரிதான ஒன்று என்றபோது, நடராஜன் பிறந்தநாளில் பங்கேற்றது எப்படி என பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்

நடிகர் அஜித்தை சந்தித்த அந்த நாளை தன்னால் மறக்க முடியாது என இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அஜர்பைஜானில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா எக்ஸ் வலைத்தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாளில் நடிகர் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

பொதுவாக அஜித் குடும்பம் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரிதான ஒன்று என்றபோது, இது எப்படி சாத்தியமானது என பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். இப்படியான நிலையில் அன்று நடந்த சம்பவம் பற்றி நடராஜன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமெண்டரி பகுதியில் பங்கேற்ற நடராஜனிடம், “நீங்கள் உங்கள் பிறந்தநாளன்று நடிகர் அஜித்தை சந்தித்த பிறகு வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்தீர்கள். அந்த நிகழ்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?” என கேள்வி எழுப்பபட்டது. 

அதற்கு, “அந்த பிறந்தநாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபியான ஷாம் சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர் தான் அஜித்துக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக இருக்கிறார்கள். நான் அந்த பிறந்தநாளில் எதிர்பார்க்கவில்லை. ஹைதராபாத் அணியுடன் இரவு உணவு சாப்பிடத்தான் சென்றேன். திடீரென சர்ப்ரைஸ் ஆக இருவரும் அஜித்தை மீட் பண்ண வைத்தார்கள். கேக் வெட்டி கொண்டாடினோம். நான் அஜித்துடன் வீடியோ காலில் தான் பேசியுள்ளேன். அவர் நிறைய நல்ல விஷயங்கள் செய்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கேன். அதனால் நேரில் சந்திக்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அஜித் ரொம்ப எளிமையானவர். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். நாங்கள் எல்லாம் சாப்பிட்டு வெளியே வந்த நிலையில் எல்லாருடைய கார் கதவையும் திறந்து விட்டு வழியனுப்பி வைத்தார். அவருடன் இருந்தால் வேறு மாதிரியான உணர்வுகள் இருந்தது” என நடராஜன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
சாலமன் பாப்பையா மறைவுக்கு உள்ளூர் மக்கள் கூட பெருசா வரல.. ஆதங்கப்பட்ட மதுரை முத்து!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றிய சல்மான் கான்.. ரசிகர்களுக்கு கடும் கண்டனம்.. நடந்தது என்ன?
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? Detention copy? ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த தவெக
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
தவெக நட்சத்திர பேச்சாளர் விதிமீறல்: வைகோ, திருமாவளவன் பிரச்சாரச் செலவு யாரோடது? அதிமுக கேள்வி!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரித்தேனா? .. அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு திமுக பிரமுகர் விளக்கம்!
Tasmac: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் முன்பணம் - யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டாடா அதிர்ச்சி அறிவிப்பு: அக்.1 முதல் வாகனங்கள் விலை உயர்வு- எவ்வளவு? என்ன காரணம்?
டாடா அதிர்ச்சி அறிவிப்பு: அக்.1 முதல் வாகனங்கள் விலை உயர்வு- எவ்வளவு? என்ன காரணம்?
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
கை,காலில் விழுந்தாவது இடைத்தேர்தலில் ஜெயிக்கணும்.. தொண்டர்களுக்கு துரைமுருகன் உத்தரவு!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?.. உண்மை இதுதான்.. நடிகை ரோஜா விளக்கம்!
Embed widget