மேலும் அறிய

Indian 2 Update: இந்தியன் தாத்தா இஸ் பேக்.... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு... இன்று முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

இந்தியன் 2' படப்பிடிப்புக்காக எழிலகம் கட்டடத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டெம்பர் 1ஆம் தேதி முதல் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியன் 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை முன்னதாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் இன்று முதல் மீண்டும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எழிலகத்தில் பிரம்மாண்ட செட்

'இந்தியன் 2' படப்பிடிப்புக்காக எழிலகம் கட்டடத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டெம்பர் 1ஆம் தேதி முதல் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைவார் என்றும், காஜல் அகர்வால் மற்றும் பாபி சிம்ஹா நடிக்கும் காட்சிகள் அதற்கு முன் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.  அந்த வகையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன்-2 படத்தின் அறிவிப்பு 2018ஆம் ஆண்டு வெளியானது.

விபத்து, மோதல்... தடைபட்ட ஷூட்டிங்!

Indian 2 Update: இந்தியன் தாத்தா இஸ் பேக்.... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு... இன்று முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

2019ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. அனிருத் இசையமைக்க, காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில்  கிரேன் கீழே விழுந்து படத்தின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிய நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கருக்கு மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.

உதயநிதி ஸ்டாலினின் முயற்சி

அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, நடிகர் விவேக் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது என பல நிகழ்வுகள் கடந்த நிலையில், மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடக்குமா என்ற கேள்வியில் ஆதர்ச கமல்ஹாசன் ரசிகர்களும், இந்தியன் பட ரசிகர்களும் காத்திருந்தனர்.

இச்சூழலில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் இதற்கான சமரச முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கடந்த மாதங்களில் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

சூசகமாக அறிவித்த கமல்!

தொடர்ந்து முன்னதாக இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் செய்தி பதிவிட்ட கமல், ”‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்!” என சூசகமாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து உறுதி செய்தார்.

இதுவரை இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 30 சதவிகித படப்பிடிப்பில் முதலில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், விரைவில் கமல்ஹாசன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, சித்தார்த், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என  பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Embed widget